
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயதான வேல்துரை. இவர் பாபநாசம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார்.
இவர் உமா என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள சூழலில் வேல்துரை சொந்த ஊரிலே பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளனர். வேல்துரை பல இடங்களில் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல் போனதால், கடன் தொல்லை அதிகரித்திருக்கிறது.
எனவே வேல்துரை சொந்த ஊரை விட்டு அடைக்கல பட்டணத்தில் உள்ள சுதாகர் என்பவரது வீட்டிற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு குடிபெயர்ந்து உள்ளனர். சுதாகர் வீட்டிற்கு கீழே மெக்கானிக் செட் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுதாகரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
தாயை இழந்த குழந்தைகளை வேல்துரையின் மனைவி கவனித்து வந்துள்ளார். குழந்தைகளை பார்த்துக் கொள்வதால் அடிக்கடி உமா சுதாகர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது சுதாகருக்கும் உமாவிற்கு திருமணத்தை மீறி உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு நீடித்து வந்த நிலையில், வேல்முருகனுக்கு இதுகுறித்து தெரிய வந்துள்ளது.
இதனால் கோபமடைந்த வேல்முருகன் “இதற்கு மேல் நீ யார் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டாம் நமது குழந்தைகளை மட்டும் பார்த்துக் கொள் போதும்” என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாவும் சுதாகரும் வேல்முருகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனை அடுத்து கேரளாவிற்கு சென்ற சுதாகர் அங்கிருந்து ஒரு பழைய இண்டிகா காரை விலைக்கு வாங்கி வந்துள்ளார். வேல்முருகனை கொலை செய்ய தனது உறவினரான ஆறுமுகத்திடம் உதவி கேட்டுள்ளார் சுதாகர். ஆறுமுகமும் சுதாகருக்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளார்
பிறகு வழக்கமாக வேல்துரை வேலைக்கு செல்லும் தென்காசி நான்கு வழி சாலையில் அவரை மோதி விபத்து ஏற்பட்டதை போல சித்தரித்து வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். திட்டத்தின் படி நேற்று முன்தினம் (மே 19) வேல்முருகன் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் அதிவேகமாக காரை இயக்கி சென்ற ஆறுமுகம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வேல்முருகனை மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு காரை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் வேல்துரை சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவலளித்துள்ளனர். முதலில் விபத்து என நினைத்த போலீசார் கரை வைத்து துப்பு துலக்க தொடங்கியுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆறுமுகத்தின் வாக்குமூலத்தின்படி சுதாகரையும் கைது செய்தனர்.
ஏற்கனவே குற்றத்திலிருந்து தப்பிக்க திட்டம் போட்ட சுதாகர் “விபத்து நடந்ததற்கு முன்தினமே சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் சென்றுவிட்டதாகவும் விபத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என திருச்செந்தூருக்கு பேருந்தில் சென்ற பயண சீட்டை காண்பித்துள்ளார்.
ஆனால் சுதாகருக்கு முன்னரே வாக்குமூலம் அளித்த ஆறுமுகம் பொய்யாக பேருந்தில் சுதாகர் பயணசீட்டு வாக்கியத்தையும் சேர்த்தே சொல்லி இருக்கிறார். பின்னர் சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டதில் “வேல்துரை மனைவிக்கும் எனக்கும் இருந்த தொடர்பு பற்றி வேல்துரைக்கு தெரியவந்ததால் நானும் உமாவும் சேர்ந்து வாழ முடிவு செய்து வேல்துரையை கொலை செய்ய திட்டமிட்டு கொன்றோம்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து கொலை செய்ய திட்டமிட்ட உமா, சுதாகர் மற்றும் உதவியாக இருந்த ஆறுமுகம் என மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.