சிங்கப்பூரில் 14 வயது சிறுமியுடன் உறவில் இருந்த ஒரு திருமணமான நபர் ஒருவர், தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் சேர்ந்து மூவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றப் பின்னணி கொண்ட 39 வயதான அந்த நபர், சிறையிலிருந்து விடுதலையான இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போதுதான் இணையம் வழியாக ஒரு சிறுமியை சந்தித்துள்ளார். அந்த பெண்ணுடன் சுமார் நான்கு ஆண்டுகளாக அவர் உறவில் இருந்துள்ளார். அந்த நபர் அப்பெண்ணை தன்னுடனும் மற்றவர்களுடனும் பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், செப்டம்பர் 14 அன்று, பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நான்கு குற்றச்சாட்டுகளுக்கும், குழந்தையைப் பாலியல் கடத்தல் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளிட்ட தன் குற்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த அந்த நபர், இந்த பாலியல் குற்றங்கள் நடந்த நேரத்தில் திருமணமானவராகவும், அவருக்கு ஒரு மகனும் இருந்துள்ளார். அவர் 2023-ல் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி மேல்நிலைப் பள்ளி படித்துவந்துள்ளார். 2022 ஜனவரியில் மொபைல் செயலி ஒன்றின் மூலம் அந்த சிறுமியும் அந்த நபரும் முதன்முதலில் பழக்கப்பட்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு 14 வயது ஆகியிருந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது வயதை அவரிடம் தெரிவித்தபோதிலும், அந்த நபர் நேரில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். அவர்கள் 2022, ஜனவரி 10 அன்று முதன் முதலாக சந்தித்துள்ளனர். அப்போது கூட அந்த நபர் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனையடுத்து, சில வாரங்களுக்கு இருவரும் தொடர்ந்து உரையாடி வந்துள்ளனர். இறுதியில் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் உடலுறவு கொள்வது பற்றி மெசேஜ்களில் பேசியுள்ளனர். அந்தப் பெண் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், ஒரு HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் படிக்கட்டுத் தளத்தில் அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாகச் சந்தித்துள்ளனர்.
அந்த சமயத்தில் இருவரும் உடலுறவில் இருந்துள்ளனர். ஆனால், அந்த நபர் அந்த சிறுமியிடம் கூறியது போல உண்மையில் அவரது மனைவியை அந்த சமயத்தில் விவாகரத்து செய்யவில்லை. மாறாக அது செயல்முறையில் இருப்பதாகக் கூறி வந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அதன் பிறகு அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். பின்னர் அந்த நபர், மூவராக சேர்ந்து உடலுறவு கொள்ள ஆசைப்படுவதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஆரம்பத்தில் மறுத்தபோதிலும், அந்த நபர் சிறுமியை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியதுடன், உறவை முறித்துக்கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், தங்களது காதல் உறவை காப்பாற்றிக்கொள்ள அந்த சிறுமி இறுதியில் சம்மதித்துள்ளார். 2022 முதல் 2024 வரை, அவரது நண்பர்களுடன் அந்த சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார். அவர்கள் சுமார் மூன்று முதல் நான்கு முறை மும்முனைப் பாலுறவில் ஈடுபட்டனர். அதில் அவர்களுக்கு பணமும் கூட கிடைத்துள்ளது.
மேலும், ஒரு செயலியை பயன்படுத்தி அதில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தனது மனைவி என அறிமுகம் செய்து வைத்து, இந்த குற்ற சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்ட பெண் அந்த நபருடனான தனது உறவை முறித்துக்கொண்டுள்ளார். இறுதியில் அந்த சிறுமி அந்த நபரை பிளாக் செய்துள்ளார். பின்னர் 2025, ஜூலை 2 அன்று, அந்த நபரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணை பிளாக் செய்ததற்காக பலமுறை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தன் தாயிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் தாய் புகார் அளிப்பதற்காக சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, அந்த நபர் 2025, ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அன்று முதல் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அந்த நபர், தனக்கு 30 வயதாக இருந்தபோது, 14 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். மேலும், 2022-ல் இந்தப் பெண்ணுக்கு எதிராகச் செய்த குற்றத்திற்காக அந்த நபருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்