அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள ஒரு பாதிரியாரின் 27 வயது மகன், தனது குடும்பத்துடன் வசித்து வந்த 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியின் தாய் இந்த பாலியல் அத்துமீறல் நடந்ததை மறைக்க உதவியதாகவும், மேலும், சிறுமியின் தாய், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நபரிடமிருந்து சலுகைகளைப் பெற்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 27 வயதான டாசன் ஜேம்ஸ் பிரவுனும், அவரது தாயாரான 54 வயதான சப்ரினா பிரவுனும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து, சிறுமியின் தாயான 32 வயது கென்ட்ரெல் பௌடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாசன் மீது சட்டரீதியான பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும், இரண்டு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டாசனின் தாய், விசாரணையில் தலையிட முயன்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆதாரங்களை மறைக்க சதி செய்தல், ஆதாரங்களைத் திரிக்க முயற்சித்தல் ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வாளர்களிடம் தவறான டிஎன்ஏ தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு குழந்தைக்கு அறிவுறுத்திய சப்ரினா அந்த கொடூர பாலியல் வன்கொடுமையை மறைக்க உதவியதாகக் கூறப்படுகிறது. அச்சிறுமியின் தாயான பௌடன் மீதும், மனிதக் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டிய குற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேர்ல் ரிவர் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் ஆவணத்தின் படி, தற்போது 14 வயதான அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தொடர்பாக, மிசிசிப்பி குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் துறையிடமிருந்து அந்த அமைப்புக்கு ஒரு பரிந்துரை கிடைத்ததை அடுத்து, புலனாய்வாளர்கள் ஜூன் 30ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அடையாளம் வெளியிடப்படாத அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை நடந்த நேரத்தில் பிரவுன் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்தான், அந்த குழந்தை தனது 13 வயதில் கர்ப்பமாகியிருக்கவேண்டும் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்ற ஆவணங்களின்படி டாசன் பிரவுனின் ஐபோனை ஆய்வு செய்த துப்பறிவாளர்கள், அதில் அவரும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் படங்களையும் காணொளிகளையும் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் அச்சிறுமியின் கர்ப்பம் குறித்தும், அவரை தந்தையாகக் குறிப்பிட்டு விவாதிக்கும் மின்னணுச் செய்திகளையும் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சிறுமியின் கர்ப்பம் குறித்து விசாரித்து வருவதை சப்ரினா பிரவுன் அறிந்தவுடன், அவர் அந்த வழக்கைத் திசைதிருப்ப முயன்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக ஒரு போலியான டிஎன்ஏ ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவது? என்றும் டிஎன்ஏ தொடர்பான என்னென்ன தகவல்களை அச்சிறுமி காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வழிநடத்த முயன்றதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளையும் ஆதாரத்துடன் நீதிமன்ற ஆவணங்கள் விவரிக்கின்றன.
மேலும், நீதிமன்ற ஆவணங்களின்படி, சிறுமியின் தாய் தனது மகள் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்பி வரக் கேட்டபோதுதான், தனது மகளின் கர்ப்பத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதாக பௌடன் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தையை அடையாளம் காட்டவோ அல்லது வேறு எந்த விவரங்களையும் அளிக்கவோ தனது மகள் மறுத்துவிட்டதாக பௌடன் தெரிவித்துள்ளார். இருப்பினும், துப்பறிவாளர்கள் பௌடனை இரண்டாவது முறையாக விசாரித்தபோது, உண்மை வெளிவந்துள்ளது. பின்னர் அவர் புலனாய்வாளர்களிடம், டாவ்சன் பிரவுன்தான் தன் மகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை என்று கூறியதாகவும், அவருக்கும் தன் மகளுக்கும் இடையிலான பாலியல் உறவு குறித்து பௌடனுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்ததாகவும் அவர் உண்மையாயி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விஷயம் அனைத்தும் தெரிந்திருந்தபோதிலும், பௌடன் பலமுறை டாவ்சனைத் தன் மகளைச் சந்திக்க அனுமதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகள், மகளின் கர்ப்பம் மற்றும் இதில் டாசனின் ஈடுபாடு ஆகியவை குறித்து டாசன் பிரவுன், சப்ரினா பிரவுன் மற்றும் மைக்கேல் பிரவுன் ஆகியோருடன் செல்போன் மூலம் உரையாடியதாக பௌடன் கூறியதாக அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஆவணத்தின்படி, ஜூன் 3 ஆம் தேதி, "நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா?" என்று கேட்டு டாசன் தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக பௌடன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, பிறக்காத குழந்தையின் தந்தை தான்தான் என்று டாசன் கூறிய பிறகு, அவர் பௌடனுக்கு பணம் கொடுத்ததாகவும், பின்னர் மிசிசிப்பி மாநில விளையாட்டு நிகழ்வு ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், தனது வாகனத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும், மற்றும் "வேறு சில உதவிகளையும் செய்ததாகவும்" அவர் புலனாய்வாளர்களிடம் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.