இசக்கி பாண்டியன், முத்துமாலை  
க்ரைம்

"குழந்தை கண் முன்னே தாய் வெட்டிக்கொலை!" 18 வயது பையனுடன் கள்ளத்தொடர்பா..?சகோதரரின் வெறிச்செயல்!

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில்

Muthu Lakshmi

திருநெல்வேலி மாநகர பகுதியில் டூவீலரில் சென்ற பெண் ஒருவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் மர்மமாக இருந்த நிலையில், பின்னர் நடந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் குடும்பப் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்ப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (36) என்பவரே கொல்லப்பட்டவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 7 வயது மகள் உள்ளார். முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்ட நிலையில், முத்துமாலை இரண்டாவது திருமணமாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார். தற்போதைய கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து, முத்துமாலை தனது மகளுடன் திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில், முத்துமாலை தனது வீட்டின் முன்பு மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு பேர் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ஆரம்பத்தில் யார் இந்த தாக்குதலை நடத்தியது என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில், பின்னர் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்தது முத்துமாலையின் சகோதரர் இசக்கி பாண்டியன் என்பதும், அவருடன் அவரது நண்பர்கள் பன்னீர்செல்வம் மற்றும் சிவா ஆகியோர் இணைந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.

விசாரணையில், முத்துமாலைக்கு ஆழ்வாநேரி பகுதியை சேர்ந்த 18 வயதான லாரி டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை பெற்றோர் மற்றும் சகோதரர் கண்டித்தும் அவர் அந்த தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியன், தனது நண்பர்கள் பன்னீர்செல்வம் மற்றும் சிவாவுடன் சேர்ந்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். நேற்று, முத்துமாலை தனது வீட்டின் அருகே குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்த போது, மூவரும் அங்கு வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தற்போது இசக்கி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மாநகர காவல் துறை துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது குடும்ப விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இசக்கி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். நடுரோட்டில் நடந்த இந்த கொடூர கொலை திருநெல்வேலி நகரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.