க்ரைம்

வெறும் 16,000க்கு மகளை விற்ற தாய்! 40 வயது நபருக்கு மனைவியான 12 வயது சிறுமி.. பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து தெருவில் விட்டு சென்ற அவலம்!

சிறுமியை அவளது தாயுடன் மீண்டும் இணைக்க உதவுவதாக உறுதியளித்து அணுகியதாக

Muthu Lakshmi

பீகாரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, அவரது தாய் 'ரூ.16,000 மற்றும் 10 புடவைகளுக்கு' வேறு மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலியைச் சேர்ந்த 40 வயது நபருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. கோயில் திருமணத்திற்குப் பிறகு, அந்த நபர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு பின்னர் வாரணாசியில் ஒரு ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மீட்கப்பட்டார்.

சந்தௌலியைச் சேர்ந்த மனைவியை இழந்தவரான ராகேஷ், இந்தப் போலித் திருமணத்தை அரங்கேற்றுவதற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இளமையாகத் தோற்றமளிப்பதற்காகத் தொலைதூர டெல்லியில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 90,000 ரூபாய் செலவழித்ததாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இது, அந்த சிறுமிக்காக அவர் செலவழித்ததாகக் கூறப்படும் தொகையை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்.

மே 21 அன்று வாரணாசியின் சாரநாத்தில் அழுதுகொண்டே சுற்றித்திரிந்த சிறுமியை உள்ளூர்வாசிகள் கண்டறிந்து, உத்தரப் பிரதேச காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுமி அளித்த வாக்குமூலங்கள், கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பெற்றோரால் கைவிடுதல் ஆகிய கொடூரமான தொடர் நிகழ்வுகளை எதிர்கொண்டது தெரிய வந்தது. பின்னர் சாரநாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தாய் யாதவ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரவி வர்மா ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின் சாரநாத் உதவி ஆணையர் விதுஷ் சக்சேனா கொடுத்த தகவலின் படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது தாய் தன்னை விற்றுவிட்டதாக அப்பெண் புலனாய்வாளர்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். யாதவ் தனது மனைவி இறந்த பிறகு குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சந்தௌலியின் சஹானியா பகுதியில் உள்ள கோவிலில் அவர் போலித் திருமணத்தை நடத்தியுள்ளார். பின்னர், அவர் அப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீட்டு வேலை செய்யும்படியும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. காவல் துறையின் கூற்றுப்படி, ஒரு சிறுமியை மனைவியாக வைத்திருப்பது கடுமையான சட்டச் சிக்கலில் அவரை மாட்டிவிடும் என்று கிராம மக்களும் அண்டை வீட்டாரும் யாதவை எச்சரித்துள்ளனர்.

யாதவ் பின்னர் மே 19 அன்று சாரநாத்தின் மண்டுவாடி பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே அந்தச் சிறுமியை கைவிட்டுச் சென்றுள்ளார். அங்கு, ஜார்க்கண்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வர்மா, அந்தச் சிறுமியை அவளது தாயுடன் மீண்டும் இணைக்க உதவுவதாக உறுதியளித்து அணுகியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, அவர் அவளை ஒரு குளத்தின் அருகே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். குழந்தையின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பின்னர் வர்மா, மே 21 அன்று அந்தச் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான BNS பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மே 22 அன்று FIR பதிவு செய்யப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.