பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய குணசேகரன். இவருக்கும் காரை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிஷாந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 வயதில் கிரித்திஷா என்ற மகள் இருந்தார். குணசேகரனின் சம்பளம் குடும்பம் நடத்த போதவில்லை என அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து இருவரும் இடையே தகராறு ஏற்பட்டதால் நிஷாந்தினி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து மகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நிஷாந்தினி பெரம்பலுாரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். அப்போது நிஷாந்தினிக்கு தன்னுடன் வேலை பார்க்கும் 30 வயதுடைய மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து வாழ நினைத்த நிஷாந்தினி அதற்கு தனது 9 வயது மகள் தடையாக இருப்பதாக நினைத்திருக்கிறார்.
எனவே மகளை கொல்ல நினைத்த நிஷாந்தினி நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கிரித்திஷா கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு. சடலத்தை கட்டிலில் உறங்குவது போல வைத்திருக்கிறார். பின்னர் அலறி சத்தமிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு நேற்று மாலை காரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சாப்பிட்டு துாங்கிய மகள் மீண்டும் எழுந்திருக்காமல் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் கிரித்திஷாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக பாடாலுார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கீர்த்திஷா சடலத்தை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, நிஷாந்தினியின் தாய்மாமன் லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாடாலுார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தினியை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பெரம்பலுாரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த, நிஷாந்தினிக்கு மணிகண்டன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதலுக்கு கீர்த்திஷா இடையூறாக இருந்ததால், அவரை நிஷாந்தினி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியதும் தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கொலை செய்து தாய் நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.