

பூந்தமல்லி அருகே 6 வயது சிறுமியை சுடுகாட்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவர் கைது! மாமா என்று உரிமையோடு அழைத்த சிறுமியிடம் அத்துமீறியது அம்பலம்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(40). இவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை அருகில் இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுமிக்கு அவர் தெரிந்தவர், என்பதாலும் அவரை மாமா என்றும் பழகி வந்துள்ளார். தன்னிடம் தவறாக கொண்டதால் செய்வதறியாது, சுடுகாட்டில் இருந்து அழுதபடியே ஓடி வந்துள்ளார்.
அதனையடுத்து இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததன் பேரில் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியிடம் சரவணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் சரவணன் வசிக்கும் பகுதியிலேயே வசிக்கும் அந்த சிறுமி அடிக்கடி சரவணனிடம் மாமா என்று உரிமையோடு அழைத்து வந்ததும், அதனை சாதகமாக பயன்படுத்தி சிறுமியிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.