kallakurichi pocso arrest Admin
க்ரைம்

“கர்ப்பமாக்கி கைவிட்ட காதலர்” - தாயின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி.. கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார்!

சத்யாவின் புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (32) வயதான இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. தாயை இழந்த இவர் தந்தையுடன் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த விஜய குமார் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக மாறி அடிக்கடி இருவரும் தனியாக சந்தித்து பேசிவந்துள்ளனர். விஜயகுமாருக்கு திருமணமாகி அலுமேலு என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் இருக்கின்றனர்.

மேலும் மாற்றுத்திறனாளி என்பதால் சத்யாவின் திருமணத்திற்கு தாமதமாகி வந்துள்ளது. தாயும் இல்லாமல் 30 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்ததால். சத்யா மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே விஜயகுமாருக்கு சத்யாவிற்கும் இடையில் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் இரண்டு வருடங்களாக உறவில் இருந்துள்ளனர்.இந்நிலையில் சத்யா கர்ப்பமடைந்துள்ளார். எனவே விஜயகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுள்ளார். இதனை மறுத்த விஜயகுமார் சத்யாவை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து விஜயகுமாரை பற்றி சத்யா போலீசில் புகாரளித்துள்ளார். சத்யாவின் புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்