muthu and virabathiran  
க்ரைம்

“என் கூடவே இருந்து.. நான் காதலிச்ச பொண்ணயே..” காதல் பிரச்சனையால் கல்லூரிக்குள் நடந்த கத்திக்குத்து!

நள்ளிரவு நேரத்தில் மணிகண்டனின் செல்போனை எடுத்த வீரபத்திரன் அந்த பெண்ணுடன் பேசிய வாட்ஸப் மெசேஜையும்

Saleth stephi graph

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி ஒன்று  இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்  அந்த கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டனின் நண்பனான வீரபத்திரனும் அதே பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மணிகண்டனின் செல்போனை எடுத்த வீரபத்திரன் அந்த பெண்ணுடன் பேசிய வாட்ஸப் மெசேஜையும் புகைப்படத்தையும் பார்த்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரபத்திரன் தனது நண்பர் முத்து என்பவருடன் கூட்டு சேர்ந்து  மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனை தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து வீரபத்திரன் மற்றும் அவரது கூட்டாளி முத்து ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வண்டலூர் அருகே  கீரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியில் மறைந்திருந்து மது அருந்து கொண்டிருக்கும்போது போலீசார் அவர்களின் செல் போன் டவரை வைத்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்திருக்கின்றனர்.

போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் 

கல்லூரியில் பணிபுரியும் ஒரு பெண்ணை தான் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும்,  என் கூடவே  பழகி நான் காதலிக்கும் பெண்ணையே மணிகண்டன் காதலித்தான் என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் எனது நண்பரான முத்துவுடன் நானும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தோம்”  என பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்தனர் .

தற்பொழுது கிளாம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

ஒரு தலை காதலால் ஏற்பட்ட மோதலில் கல்லூரி வளாகத்திலேயே ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்