Mark Edmonds 
க்ரைம்

"3,000+ ஆபாசப் படங்களுடன் சிக்கிய 61 வயது நபர்" - குழந்தைகளை குறிவைத்து.. வருட கணக்கில் பாலியல் வேட்டை! நீதிமன்றம் சொன்ன அந்த ஒரு வார்த்தை

சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்தது உள்ளிட்ட 15 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Vinvizhi Leninton

நீண்ட காலமாக இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த, ஏற்கனவே குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக தண்டனை பெற்றுவந்த குற்றவாளி ஒருவர் மீண்டும் அதே குற்றத்தில் சிக்கியுள்ளார். மேலும், அந்த குழந்தை பாலியல் குற்றவாளியின் மின்னணு சாதனங்களில் இருந்து கிட்டத்தட்ட 3,000 குழந்தைகள் மீதான ஆபாச படங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது தாஹிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

61 வயதான மார்க் எட்மண்ட்ஸ், எட்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் மற்றும் இங்கிலாந்து குற்றவியல் சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான வகைப்பாடான, சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்தது உள்ளிட்ட 15 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு எதிராகப் குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து, எட்மண்ட்ஸ் (குற்றவாளி) கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வைத்த குற்றசாட்டுகளாவன, அவர் தன்னை முறையற்ற விதத்தில் தொட்டதாகவும், ஆபாசமான புகைப்படங்களை எடுத்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்மண்ட்ஸ் தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக அந்த பெண் தனது தோழியிடம் தெரிவித்த பிறகு, இரண்டாவது பாதிக்கப்பட்ட பெண் தைரியத்துடன் முன் வந்து தனக்கு நேர்ந்தவற்றை தெரிவித்துள்ளார்.

எட்மண்ட்ஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை அவரது மின்னனு சாதனங்களைப் பறிமுதல் செய்தது. அதில் அவர்கள் பார்த்தக் காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மின்னணு சாதனத்தில் கிட்டதட்ட 3,000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில, புகாரளித்த இருவருடன் தொடர்புடையவையாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

எட்மண்ட்ஸ்க்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த பாலியல் வன்கொடுமையில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் ஒருவரின் தாய் வெளியிட்ட அறிக்கையில், எட்மண்ட்ஸிடம், "நீங்கள் என் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள். என் மகள்களை அழித்துவிட்டீர்கள்," என்று கண்ணீர் மல்க கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு விசாரணைப் பிரிவின் (CPIU) துப்பறியும் காவலர் ஒருவர், "எட்மண்ட்ஸ் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை மிக மோசமாகத் தவறாகப் பயன்படுத்தியதுடன், இந்தப் சிறுமிகளைப் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், போல்டனைச் சேர்ந்த எட்மண்ட்ஸ்-க்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உட்பட 3 தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எட்மண்ட்ஸ் அவர் மீது சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.