ஃபேண்டஸி செக்ஸுக்கு ஆசைப்பட்ட குடும்பப் பெண்.. கணவனுக்குத் தெரியாமல்.. எல்லை மீறிய ஆசையால்.. தோப்பில் நடந்த கொடூரம்!

சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் சந்தித்த ஒருவரை இரண்டே நாட்களில் சந்திக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் இருக்கிறது.
Hassan Woman Killed After Meeting Facebook Friend Within Days
ஃபேண்டஸி செக்ஸுக்கு ஆசைப்பட்ட குடும்பப் பெண்.. கணவனுக்குத் தெரியாமல்.. எல்லை மீறிய ஆசையால்.. தோப்பில் நடந்த கொடூரம்!
Published on: 
Updated on: 
2 min read

இணையதள வளர்ச்சி தினமும் நம்மை முன் பின் தெரியாத பலரையும் டிஜிட்டல் வழியில் சந்திக்க வைக்கிறது. ஒரு கமண்ட் செய்பவர், நாம் ரசித்துப் போடும் கமண்டை லைக் செய்பவர் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லோருடனும் நமக்கு சில மணித்துளி உறவு மலர்ந்து உதிர்கிறது. அந்த கண நேரத்தில் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் என எண்ணுவது நம் முட்டாள்தனம் தான்.

இதற்கு உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் சந்தித்த ஒருவரை இரண்டே நாட்களில் சந்திக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் இருக்கிறது.

பிரீத்தி என்ற அந்த பெண் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நபரால் கொலை செய்யப்பட்டார்.

28 வயதான பிரீத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவரது கணவர் ஜூன் 23ம் தேதி பிரீத்தியை காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளார்.

விசாரித்த காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு அவர் பேஸ்புக்கில் புனீத் என்ற நபருடன் பழகி வந்ததைக் கண்டறிந்துள்ளனர். பழக தொடங்கிய சில நாட்களிலேயே இருவரும் சேட்டிங்கில் இருந்து கால் செய்து பேசுவது என நெருக்கமாகி நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

புனித், பிரீத்தியை ஹாசனிலிருந்து மைசூருக்கு வாடகைக் காரில் அழைத்து சென்றுள்ளார். வழியில் சில இடங்களைப் பார்வையிட்ட பிறகு, அவர்கள் கிருஷ்ண ராஜா சாகர் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ப்ரீத்தி மீண்டும் மீண்டும் உடலுறவு மேற்கொள்ள விரும்புவதாகக் கூறியதாகவும், ஆனால் புனீத் தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. 

காவல்துறை கூறுவதன்படி  அவர்கள் கே.ஆர். பேட்டையை அடைந்தபோது பிரீத்தி மீண்டும் வற்புறுத்தியதால், புனீத் அவரைக் கட்டரகட்டாவில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது புனீத் ப்ரீத்தியின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. ப்ரீத்தி சரிந்து விழுந்து இரத்தம் வழியத் தொடங்கியபோது, புனீத் ​​ஒரு கல்லை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்து, அவளைச் சம்பவ இடத்திலேயே கொன்றதாக காவல்துறை தெரிவிக்கிறது.

பின்னர் அவன் உடலைத் தனது கிராமமான கரோட்டிகிராமத்திற்குக் கொண்டு சென்று, தனது பண்ணை நிலத்தில் புதைத்துள்ளார் புனீத். காவல்துறை விசாரணைக்குப் பிறகு பிரீத்தியின் கணவர் உடலை அடையாளம் காட்டியுள்ளார்.

புனீத் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. பேஸ்புக் நண்பர்களின் முதல் சந்திப்பே இப்படி கொடூர குற்றமாக மாறியது இன்றளவும் அதிர்ச்சிகரமான சம்பவமாக பேசப்படுகிறது.

Hassan Woman Killed After Meeting Facebook Friend Within Days
“கணவனை இழந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி” - பாலியல் இச்சைக்கு இணங்க மிரட்டிய வாலிபர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.