police investication and aarumugam  
க்ரைம்

"பெண்ணை கிண்டல் செய்ததால்" - கழுத்து அறுத்துக் கொலை செய்த சிறுவன்.. குழி தோண்டி புதைத்துவிட்டு போலீசுக்கு தகவல்!

அவருக்கு அதிகமாக மது கொடுத்துள்ளார்கள், இதை குடித்து ஆறுமுகம் சில நிமிடத்திலேயே தனது

Anbarasan

திருநெல்வேலி டவுன் செபஸ்டியர் கோவில் தெருவில் வசித்து வருபவர் , ஆறுமுகம் இவருக்கு வயது 20, இவர் கொத்தனார் கையால் மற்றும் பெயிண்டர் வேலை மேலும் அவ்வபோது கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு டவுன் குருநாதன் கோவில் அருகே, ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது, இதைத் தொடர்ந்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர், அவர் சொன்ன தகவலின் அடிப்படையில், டவுன் குருநாதன் கோவிலுக்கு, அருகே உள்ள முட்புதரில் அருகே உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது, பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 17 வயதுடைய சிறுவன் ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அந்த சிறுவனின்,பெரியம்மா மகளை ஆறுமுகம் அடிக்கடி கிண்டல் செய்ததாகவும், இது தொடர்பாக அச்சிறுவன் பலமுறை எச்சரித்தும், அவர் அதனை கண்டு கொள்ளாததால், நேற்று இரவு ஆறுமுகத்தை மது அருந்துவதற்காக அச்சிறுவனும் மற்றும் அவருடைய நண்பர்களும் தொலைபேசி மூலம் அழைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆறுமுகம் வந்துள்ளார், பின்னர் அவருக்கு அதிகமாக மது கொடுத்துள்ளார்கள், இதை குடித்து ஆறுமுகம் சில நிமிடத்திலேயே தனது சுயநினைவை மறந்தார், பின்னர் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு, அவரது கழுத்தை அறுத்துள்ளனர்.

பின்னர் நெல்லை, டவுன் பகுதியில் ஒரு குழியைத் தோண்டி அதில் அவரது உடலை புதைத்து விட்டு, காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு அங்கே இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது, பெண்ணை கிண்டல் செய்த சம்பவத்தில் இந்த கொலை நடந்திருக்கிறது, என்றும் மது குடிப்பதற்கு வா என அழைத்துச்சென்று அவரை கொலை செய்திருக்கிறார்கள், என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது

இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை தேடி கண்டுபிடித்து மீட்ட போலீசார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மேற்கு மாநகர காவல் துறை, துணை ஆணையாளர் கீதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம், தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவா (வயது 26 ), 17 வயது சிறுவன் அவரது தம்பி மற்றும் அவரது நண்பர் ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பெண்ணை கிண்டல் செய்த சம்பவத்திற்காக வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்