CSK-யோட track record பார்த்தா, ஒரு pattern தெளிவா தெரியும்—தோனி எப்பவும் underdog பிளேயர்கள தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு freedom கொடுத்து, potential-ய வெளிக்கொண்டு வருவாரு. ரஹானே, ஷேன் வாட்சன், ராயுடு, உத்தப்பா, சிவம் துபே—இவங்க எல்லாம் பிற டீம்களால ignored ஆனவங்க அல்லது form-ல இல்லாதவங்க. ஆனா, CSK-ல இவங்களுக்கு second chance கொடுத்து, game-changer-ஆ மாத்தினது தோனியோட genius. 2018-ல ஷேன் வாட்சன் final-ல century அடிச்சு கோப்பை ஜெயிச்சது, 2023-ல சிவம் துபே middle order-ல fire ஆனது—இதெல்லாம் இந்த formula-வோட proof.
எல்லா சீசன்லயும் CSK auction-ல big names-க்கு பின்னாடி ஓடாது—பேப்பர்ல weak டீம்னு சொல்லப்படும், ஆனா மைதானத்துல execution-ல Fire-ஆ ஆடும். 5 ட்ரோஃபிகள் (2010, 2011, 2018, 2021, 2023) இதுக்கு சாட்சி. இது ஒரு high-risk, high-reward strategy—ஆனா, தோனியோட captaincy மேஜிக் இத hit ஆக்கியிருக்கு.
2025 ஆக்ஷன்: அதே ஃபார்முலா, ஆனா Flop ஆனது ஏன்?
இந்த சீசனுக்கான auction-லயும் CSK அதே template-ய பின்பற்றுச்சு—ராகுல் திரிபாதி (Rs. 3.4 கோடி), தீபக் ஹூடா (Rs. 2.8 கோடி) மாதிரி outdated பிளேயர்கள வாங்குச்சு. இவங்க ரெண்டு பேரும் ஒரு காலத்துல form-ல இருந்தவங்க—ஆனா, சமீப காலமா consistent-ஆ ஆடல. CSK நினைச்சிருக்கும்—“இவங்களுக்கு free hand கொடுத்தா, பழைய magic திரும்பி வரும்”னு. ஆனா, இந்த தடவ அது boomerang ஆகிடுச்சு.
ராகுல் திரிபாதி: strike rate 130-க்கு கீழ ஸ்கோர் பண்ணி, powerplay-லயே flop.
தீபக் ஹூடா: middle order-ல ஒரு impact இல்லாம, ஏன் என்னை டீம்ல எடுத்தீங்க-ங்குற மைண்ட் செட்டுல இருக்கிறார்
இப்போ CSK-யோட batting line-up பார்த்தா, சிவம் துபே மட்டும் தான் ஒரு hard hitter மாதிரி தெரியுது—ஆனா, அவரும் out of form-ல இருக்காரு. Strike rate 170-180 உள்ள powerful youngsters-ய வாங்காம, பழைய formula-வ மட்டும் நம்பி ஆக்ஷன்ல strategy போடாதது CSK-க்கு setback ஆகியிருக்கு.
ருதுராஜ் கெய்க்வாட் Captaincy
தோனி இப்போ captain இல்ல—ருதுராஜ் கெய்க்வாட் தான் CSK-யோட new leader. ருதுராஜ் ஒரு solid batsman-ஆ இருந்தாலும், தோனியோட tactical brilliance-ய இன்னும் match பண்ண முடியல. தோனி underdog பிளேயர்கள revive பண்ணி, அவங்களுக்கு confidence கொடுத்து turnaround பண்ணுவாரு—ஆனா, ருதுராஜ் இந்த art-ய இன்னும் master பண்ணல.
இந்த சீசன்ல team selection முதல் batting order வரைக்கும் ஒரு clarity இல்லாம இருக்கு. சிவம் துபே மட்டும் form-ல இருந்தா ஒரு hope இருக்கும்—ஆனா, அவரும் dip-ல இருக்கறதால, CSK-யோட middle order ஒரு collapse மாதிரி ஆகியிருக்கு. Auction strategy-ல high strike rate பேட்ஸ்மேன்கள மிஸ் பண்ணது, ருதுராஜோட leadership-ல ஒரு gap-ஆ தெரியுது.
CSK vs SRH: கடைசி இடத்துக்கு Race!
இப்போ ஐபிஎல் points table-ல CSK கடைசி இடத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)-யோட போட்டி போடுது. SRH-யும் இந்த சீசன்ல batting collapse பிரச்சனையில சிக்கியிருக்கு—ஆனா, அவங்களுக்கு ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாஸன் மாதிரி explosive பிளேயர்கள் இருக்காங்க. CSK-க்கு அப்படி ஒரு game-changer இல்லாதது பெரிய weakness.
தோனியோட silent killer ஃபார்முலா CSK-ய ஒரு dynasty-ஆ ஆக்குச்சு—ஆனா, 2025-ல அது fail ஆகியிருக்கு. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆக்ஷன் பெரிய ஃபெயிலியர். சிவம் துபே form-ல இல்ல, ருதுராஜோட captaincy இன்னும் evolve ஆகல—இதெல்லாம் சேர்ந்து CSK-ய இந்த சீசன்ல கடைசி இடத்துக்கு தள்ளினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஒன்னும் இல்ல. ஆனா ஒன்னு புரிஞ்சு போச்சு.. “தோனி இல்லாம இந்த formula work பண்ணாது”னு!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்