க்ரைம்

“மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி” - வங்கி மேலாளரிடம் ஏமாற்றப்பட்ட 40 லட்சம்.. வாட்ஸ்அப் குழு மூலம் நூதன திருட்டு!

இதையடுத்து, அந்த செயலியில் அவருடைய கணக்கில் ரூபாய் 2.25 கோடி..

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கானை கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய ராஜசேகர். இவர் அரியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இணையத்தில் கிடைத்த விளம்பர இணைப்பு வழியாக, ஒரு இணையவழி வர்த்தக குழுவில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அந்தக் குழுவில் “ஒரு குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தால் 500 சதவீதம் வரை லாபம் பெறலாம்” எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜசேகர், அவர்கள் கூறிய செயலி மூலம் இணையவழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில், அந்த செயலியில் இருந்து அவருக்கு ரூபாய் 3.45 லட்சம் வருமானம் கிடைத்தது. இதனால், அந்த மோசடிக் கும்பல் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது இதனால் அதிக லாபம் ஈட்டும் ஆசையில் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 46.90 லட்சத்தைச் வங்கி மேலாளர் செலுத்தியுள்ளார். இதையடுத்து, அந்த செயலியில் அவருடைய கணக்கில் ரூபாய் 2.25 கோடி சேர்ந்திருப்பதாக காட்டியுள்ளது.எனவே அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது தான் பணம் வரவில்லை பொய்யா செயலியில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இருப்பினும் ஒரு முறை பரிசோதனை செய்ய நினைத்த மேலாளர் அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, மோசடிக் கும்பல் 2 சதவீதம் சேவைக் கட்டணமாக ரூபாய் 50 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உறுதி செய்த ராஜசேகர், உடனடியாக “1930” என்ற இணையவழிக் குற்றப்பிரிவு உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த இணையவழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த 31 வயதுடைய வேலு என்பது தெரியவந்தது. இவர் திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி தலைமையிலான காவல்துறையினர், நேற்று வேலுவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் ரொக்கம், 2 கைபேசிகள், வங்கி ஆவணங்கள் மற்றும் வங்கி அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.