
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். ஐடி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் மூவரும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்ஜ் கோட்டையம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சுற்று சார்ந்த கல்வியை படித்து வந்துள்ளார். அப்போது ஜார்ஜுக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி படிப்பு சம்பந்தமாக வெளிநாட்டிற்கு செல்கிறேன் என கூறிவிட்டு ஒரு பெண்ணுடன் ஜார்ஜ் வெளிநாட்டிற்கு சென்றுவந்துள்ளார். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து ஜார்ஜ் தனது மனைவியின் கண் முன்னே அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஜார்ஜ் தினமும் ஒவ்வொரு பெண்களை அழைத்து வந்து தனிமையில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெஸ்ஸி ஜார்ஜுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் தனது மனைவியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க நினைத்து ஜெஸ்ஸியின் உடலை காரில் எடுத்து சென்று இடுக்கையில் உள்ள ஒரு பள்ளத்தில் வீசிவிட்டு மைசூருக்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் ஜார்ஜின் மகன் அவரது தாய்க்கு போன் செய்துள்ளார் அப்போது தாய் போன் எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார்.
அப்போது தாய் வீட்டில் இல்லாததை அறிந்த அவரது மகன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்து ஜெஸ்ஸியை காணவில்லை என புகாரளித்துள்ளார். புகாரை கைப்பற்றி விசாரணை நடத்த தொடங்கிய போலீசாருக்கு இடுக்கி பகுதியில் பள்ளத்தி ஒரு பெண் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அங்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் ஜெஸ்ஸி உறவினர்களை வைத்து இறந்து கிடந்தது ஜெஸ்ஸி என்பதை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஜெஸ்ஸியின் உடலை பள்ளத்தாக்கில் வீசிவிட்டு தப்பி சென்ற அவரது கணவர் ஜார்ஜை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கணவனே அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜார்ஜை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.