திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் 15 வயதுடைய லெட்சுமணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சபரி ராஜன் என்பவரும் பழகி வந்த நிலையில் அடிக்கடி சபரி ராஜன் லெட்சுமணன் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லபடுகிறது. வழக்கம் போல் கடந்த ஐந்தாம் தேதி மாலை மாணவர் லெட்சுமணன் வீடிற்கு வந்த சபரிராஜன் மாணவனுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சபரி ராஜன் அரிவாளால் மாணவர் லெட்சுமணனை சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவரை சபரி ராஜன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரி ராஜனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 10 வகுப்பு மாணவனை சபரி ராஜன் ஓரின சேர்க்கைக்கு அழைத்த நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கஞ்சா போதையில் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மாணவனின் உயிரிழப்பிற்கு உரிய நீதி கிடைக்காத வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் “கஞ்சா - ஜீரோ சதவீதம்” என கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், அவரது சொந்த ஊர் அருகே நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவன் 23 வயது வாலிபரல் வீட்டிலேயே வைத்து அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.