New Jersey pastor arrested New Jersey pastor arrested
க்ரைம்

'சர்ச்'க்கு வந்த 16 வயது சிறுமியை.. மயக்கமருந்து கொடுத்து சீரழித்த பாதிரியார்! "தேவாலயத்தில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட கொடுமை!"

பிரின்சன் நினைவு தேவாலயத்தின் பிஷப் மீது, சுயநினைவற்ற நிலையில் இருந்த ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக...

Vinvizhi Leninton

நியூ ஜெர்சியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், தனது வீட்டில் ஒரு பதின்வயதுப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பானத்தில் பாதிரியார் போதை மருந்து கலந்ததாகவும், அதனால் அந்த இளம்பெண் மயக்கமடைந்தவுடன் பின்னர் அவரை அந்த பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, பிப்ரவரி 19 அன்று அவர் டிரென்டனில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெர்சர் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, 16 வயதான அந்தச் சிறுமி, 64 வயதான பிரின்சனுக்கு (பாதிரியார்) எதிராக ஒரு வருடத்திற்கும் முன்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிரின்சன் நினைவு தேவாலயத்தின் பிஷப் மீது, சுயநினைவற்ற நிலையில் இருந்த ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றசாட்டுகள், குழந்தையின் நலனுக்கு ஆபத்தை விளைவித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014-ல் தேவாலயத்தை நிறுவிய பிரின்சன், கடந்த ஆண்டு தனது வீட்டில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரைத் துன்புறுத்தியதாக மெர்சர் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், போதகர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரின்சன் 2014-ல் அந்தத் திருச்சபையை நிறுவியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் , பிரின்சன் டிரென்டன் காவல்துறையின் தன்னார்வ மதகுரு என்று கூறிக்கொண்டார். 2008 செப்டம்பரில், பிலடெல்பியாவில் மற்றொரு 15 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு, நியூ ஜெர்சியின் புளோரன்ஸில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காக பிரின்சன் கைது செய்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2009-ல், பிரின்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சமரச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார், மேலும் அவருக்கு நான்கு ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.