புதுமணப்பெண் தற்கொலை  புதுமணப்பெண் தற்கொலை
க்ரைம்

விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்! புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை - தலைமறைவனரா காதல் கணவர்?

விருத்தாச்சலம் அருகே திருமணமான 6 மாதத்தில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Vinvizhi Leninton

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சந்தன குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவரின் மகள் சிவமணி (30). அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சக்திவேல் சிவமணியை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கடந்த இருதினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 27ம் தேதி காலை சிவமணி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது சிவமணி தூக்கிட்டு தற்கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள் தங்களது மகள் சிவமணி தூக்கிட்டு தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, சிவமணியின் பெற்றோர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு அங்கு வந்திருந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் சிவமணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவமணியின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் தாய், தனது மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், உணவு ஏதும் வழங்காமல் சித்திரவதை செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், சிவமணி தாயுடன் பேசவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் எப்போதும் அவரை கண்காணித்த வண்ணமே இருந்ததாக சிவமணியின் தயார் கூறினார். மேலும், போலீசாருடன் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தட்டி கழிப்பதாகவும் குற்றம் சாட்டினர். தற்போது சக்திவேல் தப்பித்துவிட்டதாகவும் பெற்றோர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர். மேலும், இவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் இதுகுறித்து புகைரளித்தும் போலீசார் எந்த இதனையடுத்து, மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இது தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றன. திருமணமாகி ஆறு மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.