நீலகிரி உள்ள பந்தலூர் வட்டம் பாடந்தொரை கிராமத்தை சேர்ந்தவர் கைருநிஷா. இவருக்கு ஹசீனா என்ற தங்கையும் உள்ளார். கைருநிஷாவிற்கும் கூடலூரில் ஒன்பதாவது மயில் பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கைருநிஷாவின் தங்கை ஹசீனாவின் கணவர் போதை பொருள் கடத்தல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தனது கணவரை வெளியில் எடுக்க ஹசீனா தனது அக்காவிடம் உதவி கேட்டுள்ளார். தங்கைக்கு உதவி செய்ய எண்ணிய கைருநிஷா ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
கைருநிஷாவின் மாமனார் மற்றும் மாமியார் தனியாக வசித்து வந்த நிலையில், மாமனார் அருகில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். கைருநிஷாவின் மாமியாரான மைமூனா தன்னிடம் வைத்துள்ள தங்க நகையை அபகரிக்க நினைத்துள்ளார் கைருநிஷா.
எனவே தனது மாமனார் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த மைமூனாவை, கைருநிஷாவும் அவரது தங்கையான ஹசீனாவும் சேர்ந்து. குக்கர் மூடியை பயன்படுத்தி தலையில் சரமறியாக தாக்கியும், காதை அறுத்தும் கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து சென்றுள்ளனர்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மைமூனாவின் கணவர் வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சமையல் அறையில் மைமூனா ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது கணவர் போலீசில் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மைமூனாவின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சொந்த மருமகளே நகைக்காக மாமியாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கைருநிஷாவையும் அவரது தங்கை ஹசீனாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மருமகளே மாமியாரை கொன்ற செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்