
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பேரழகே முந்தி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி அவரது கணவரும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். எத்தனை மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் ராஜலட்சுமியும் அவரது கணவரும் இரவு நேரத்தில், வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது ஆளில்லாத இடத்தில் சாலையில் குழந்தை ஆளும் சத்தம் கேட்டுள்ளது பார்த்தால் சாலையின் ஓரத்தில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை கிடந்துள்ளது.
அந்த குழந்தையை பார்த்த ராஜலட்சுமி, அங்கே கண்ணீர் விட்டு அழ தொடங்கியுள்ளார். பின்னர் ராஜலட்சுமியும் அவரது கணவரும் அந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று தங்கள் குழந்தை போல வளர்க்க தொடங்கியுள்ளனர்.
குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே ராஜலட்சுமியின் கணவர் உயிரிழந்துள்ளார். பின்னர் ராஜலட்சுமி தனி ஒரு பெண்மணியாக குழந்தையை வளர்த்து வந்துள்ளார். 8 ஆம் படித்து வந்த அச்சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற 22 வயது நபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த காதல் காலப்போக்கில் எல்லையை மீறி சென்றுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் தாய் ராஜலட்சுமி சிறுமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தாய் கண்டித்ததை குறித்து அச்சிறுமி கணேஷிடம் கூறியுள்ளார்.
பின்னர் கணேஷ் சிறுமியிடம் “உன் அம்மாவை கொன்று விடலாம் அப்படி செய்தால் நம் காதலுக்கு யாரும் மறுப்பு சொல்ல இருக்கமாட்டார்கள் நல்லா வாழலாம், பிறகு உன் தாயின் சொத்துக்கள் எல்லாம் நமக்குத்தான் கிடைக்கும்” என கூறி சிறுமியை மூளை சலவை செய்துள்ளார்.
கணேஷ் சொன்னதை கேட்ட சிறுமி கடந்த(ஏப்ரல் 29) தனது அம்மாவிற்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தனது தாய் மயங்கிய பிறகு கணேஷுக்கு தகவல் அளித்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு தனது நண்பரான தினேஷுடன் வந்த கணேஷ் சிறுமியுடன் சேர்ந்து ராஜலட்சுமியை அடித்து அவரது முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொன்றுள்ளனர்.
ராஜலட்சுமியை அதே இடத்தில் விட்டு விட்டு மூவரும் தப்பி சென்றுள்ளனர். பின்னர் பக்கத்துக்கு தெருவில் வசித்து வரும் ராஜலட்சுமியின் தங்கை, எதார்த்தமாக ராஜலட்சுமியை பார்க்க சென்றுள்ளார். அவர் ராஜலட்சுமி மயங்கியதாக நினைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், இது குறித்து ராஜலட்சுமியின் தங்கை போலீசில் புகாரளித்துள்ளார்
சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்து விசாரித்த போலீசார் ராஜலட்சுமியின் வளர்ப்பு மகளிடம் விசாரணை மேற்கொண்ட போது மகளே தாயை கொலை செய்தது வெளிவந்துள்ளது.அது மட்டுமில்லாமல் அதே பகுதியை சேர்ந்த சதீஸ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு தொடர்பிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆசை ஆசையாய் எடுத்து வளர்த்த மகள் பாதை மாறி போய் பாசமாக பார்த்துக் கொண்டு தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்