நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் 22 வயதுடைய பிரவீன் இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த 15 வயதுடைய 10 வகுப்பு படிக்கும் மாணவிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இன் காரணமாக பிரவீன் மற்றும் மனைவி அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் வெளியில் சுற்றி வந்துள்ளனர்.
மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது, இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். அப்போது பிரவீனுக்கும் ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்திருக்கின்றனர். இது தெரியாமல் மீண்டும் பள்ளி மாணவி பிரவீன் இடம் பேச தொடங்கிய நிலையில் ஒரே நேரத்தில் பிரவீன் இருவரையும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கல்லூரி மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.
எனவே பிரவீன் அவரது வீட்டிற்கு தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வீடு எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பள்ளி மாணவி அவரது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் அவரது பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து பிரவீனை தேடி வந்தனர்.
ஊட்டியில் வைத்து காவல்துறையினர் பிரவீனை கைது செய்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது மேலும் கடந்த (நவ 03) ஆம் தேதி பள்ளி மாணவிக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இரண்டு மாணவிகளும் கையில் குழந்தையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இரண்டு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரவீனை பார்க்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.