Child Abuse Case Child Abuse Case
க்ரைம்

"15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!" அந்த கோலத்தில் அவர்களை நேரில் பார்த்த கணவர் - அதிரவைக்கும் உண்மை சம்பவம்

அதிகாலை சுமார் 1 மணியளவில், அலெக்சிஸ் ஒரு திரைப்படத்தை ஓடவிட்டதாகவும், "தான் இரண்டு வாரங்களாக தன் கணவருடன் உடலுறவு கொள்ளவில்லை என்று வளர்ப்பு மகனிடம் கூறியுள்ளார்.

Vinvizhi Leninton

தனது 15 வயது வளர்ப்பு மகனுடன் பாலியல் உறவு கொண்டபோது கணவனிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்ட புளோரிடா செவிலியர் ஒருவரின் மாநில மருத்துவ உரிமம், அவரது கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த சில வாரங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ், ஜூலை 2024-ல் தனது வீட்டில் உள்ள சோஃபாவில் தனது பதின்மவயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்துள்ளார். ​​அவரது கணவர் ஃபிராங்க் அதைக் கண்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் அவரது மனைவி அலெக்சிஸ். பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரது தண்டனை குறைக்கப்பட்ட பிறகு, அலெக்சிஸ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

சில வாரங்களுக்கு முன்பு செவிலியர் வாரியத்திற்கும் அலெக்சிஸ்-ன் வழக்கறிவருக்கும் இடையே நடந்த விசாரணைக்குப் பிறகு, கடந்த மாதம் புளோரிடா சுகாதாரத் துறை அவரது செவிலியர் உரிமத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அக்டோபர் மாதம் செவிலியர் வாரியத்தை சந்தித்த பிறகும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதையும் அலெக்சிஸ் மறுக்காததாலும், அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அலெக்சிஸிடமிருந்து பிரிந்து வாழும் கணவரும் கடந்த மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதாவது, 2024, ஜூலை 26ம் தேதி இரவு, அலெக்சிஸ் தனது இரண்டு குழந்தைகளையும் உறங்க வைத்த பிறகு, அப்போது 15 வயதாக இருந்த தனது வளர்ப்பு மகனுடன் "பொழுதுபோக்க" முடிவு செய்துள்ளார். அலெக்சிஸின் கணவருக்கு தாமதமாக வேலைமுடிந்த காரணத்தால் வீட்டிற்கு தாமதமாக வர நேரிட்டுள்ளது. அப்போது அந்த இருவரும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடி, திரைப்படங்களைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

ஆவணங்களின்படி, அந்த பதின்மவயது வளர்ப்பு மகன் காவல்துறையிடம், அதிகாலை சுமார் 1 மணியளவில், அலெக்சிஸ் ஒரு திரைப்படத்தை ஓடவிட்டதாகவும், பின்னர் அந்தப் படம் சலிப்பூட்டுவதாகக் கூறி, "தான் இரண்டு வாரங்களாக தன் கணவருடன் உடலுறவு கொள்ளவில்லை என்று வளர்ப்பு மகனிடம் கூறியுள்ளார். அதன் பின்பு இருவரும் பாலியல் உறவில் இருந்ததாக காவல்துறையிடம் அந்த பதின்ம வயது சிறுவன் கூறியுள்ளார். அந்த சமயத்தில், பிராங்க் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, ​​அவரது மனைவியும் மகனும் சோஃபாவில் ஒன்றாக இருந்ததைக் கண்டதாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தந்தை, தன் மகனை அவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் நடந்த மறுநாள், அலெக்சிஸ் அந்தச் சிறுவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் கணவர் இதைக் கண்டுபிடித்திருக்கக் கூடாது என்று விரும்புவதாகக் கூறியதாகவும் அந்த ஆவணங்கள் குற்றம் சாட்டின. நீதிமன்ற ஆவணங்களின்படி, சிறுவனின் தந்தை காவல்துறையை அழைக்கத் தவறியதை அடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அலெக்சிஸிக்கு 10 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இருப்பார் என்றும், மேலும் 200 மணிநேர சமூக சேவை செய்யவும், அபராதங்கள் மற்றும் நீதிமன்றச் செலவுகளைச் செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.