நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நெல் ஏற்றும் தண்டவாள பகுதியில் 38 வயது மதிக்க தக்க ஆண் சடலமும், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 45 வயது மதிக்க தக்க பெண் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சம்பவஇடத்திற்கு விரைந்த போலீசார் கொலை நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமாரக்களை ஆய்வு செய்து விசராணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே நிலையத்தில் கொலை செய்யப்பட்ட நபர் அக்கரைப்பட்டி சேர்ந்த அருண் குமார் என்பதும் நாகப்பட்டினம் மருத்துவமனை அருகே இறந்து கிடக்கும் பெண் 40 வயதான கீழ் உள்ளூரை சேர்ந்த சித்ரா என்பதும் தெரிவந்துள்ளது. இரு உடல்களையும் மீட்டு நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
நாகப்பட்டினம் மருத்துவமனை வளாகத்தில் 30 வயது நிறைந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பி சுஜித் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். இதில் அவர் கீழ்வேளூரை சேர்ந்த சித்ரா (35) என்பது தெரியவந்தது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திருமணமாகி 10 ஆடுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். மேலும், இவர் நாகை, நாகூர் பேருந்து நிலையங்கள் அருகே சுற்றி திரிந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதேநாளில் நாகப்பட்டினம் ரயில்வே குட்செட் பகுதியில் 40 வயது நிறைந்த ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து டி எஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த அருண்குமார் (40) என்பது தெரியவந்தது. இவர் கேரளாவில் தங்கி மீன்பிடித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தாய் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மீன்பிடி தடைகாலம் என்பதால் நாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவரது முதல் மனைவி இறந்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையில் குடிபோதை காரணமாக குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த இரு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பதை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.