Chain snatching incident in Trichy 
க்ரைம்

கையெடுத்து கும்பிடும் அளவுக்கு "டிப் டாப்" பெண்கள்.. ஆனால் பஸ்ஸில் செஞ்ச "சம்பவம்" இருக்கே! Climax-ல் ஆப்பு வைத்த ஆட்டோக்காரர்கள்!

சக பயணிகள் சத்தமிடவே பெண்கள் இருவரும் நைசாக தப்பமுயற்சித்துள்ளனர்...

Anbarasan

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் இன்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு வந்தபோது, பேருந்தில் டிப்டாப்பாக வந்த இருபெண்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர்.

கடைவீதி பேருந்து நிறுத்தத்திற்கு, பேருந்து வந்தபோது மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்டதைக்கண்ட சக பயணிகள் சத்தமிடவே பெண்கள் இருவரும் நைசாக தப்பமுயற்சித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களான சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்ற இரு பெண்களையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்த நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு இருபெண்களையும் மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். காலை நேரத்தில் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்