கடைசி வரை அவுட் கேட்ட "இளம்புயல்".. காம்ப்ரமைஸ் ஆன தோனி - இறுதியில் தோனியே எதிர்பார்க்காத "சர்பிரைஸ்"!

2019ம் ஆண்டுக்கு பிறகு தோனி "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருதையும் வென்றார்.
chennai super kings won the match
chennai super kings won the matchAdmin
Published on
Updated on
2 min read

நேற்று (ஏப்.14) லக்னோவில் நடந்த மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

லக்னோவின் எகானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த மேட்சில் முதலில் டாஸ் வென்ற CSK கேப்டன் எம்.எஸ். தோனி, LSG-யை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் (63 ரன்கள்) மட்டும் சிறப்பாக ஆடினார். ஆனால் CSK பவுலர்கள், குறிப்பா நூர் அஹ்மத் (4 ஓவருக்கு 13 ரன்கள் மட்டும்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (2/24) அபாரமாக பந்து வீசி LSG-யை கட்டுப்படுத்தினர். இளம் பவுலர் அன்ஷுல் கம்போஜும் 3 ஓவருக்கு 20 ரன்கள் மட்டுமே கொடுத்து, முக்கியமான நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

CSK பேட்டிங்கில் ஆரம்பம் சுமாராக இருந்தாலும், ரச்சின் ரவீந்திரா (37 ரன்கள்), ஷிவம் துபே (நாட் அவுட் 44), மற்றும் தோனியின் 11 பந்துகளில் 26 ரன்கள் (அதிரடி கேமியோ) CSK-யை வெற்றிக்கு அழைத்து சென்றது. 19.3 ஓவர்களில் 168/5 என்று டார்கெட்டை எட்டி, CSK தோல்வி சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பூரன் அவுட் - மேஜிக் மொமெண்ட்!

இப்போ மேட்சின் ஹைலைட் மொமண்ட்டுக்கு வருவோம். LSG இன்னிங்ஸின் 4-வது ஓவரின் கடைசி பந்து. CSK-யின் இளம் பவுலர் அன்ஷுல் கம்போஜ், பயங்கர ஃபார்மில் இருக்கும் நிக்கோலஸ் பூரனை எதிர்கொண்டார். பூரன் அப்போ 8 ரன்களில் (9 பந்துகள்) ஆடிக்கிட்டு இருந்தார். ஏற்கனவே இரண்டு பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே-வை பயமுறுத்த ஆரம்பித்த தருணம் அது. ஆனா, கம்போஜ் ஒரு ஃபுல் லென்த் பந்தை மிடில் ஸ்டம்பில் வீசினார். பந்து சின்னதா இன்ஸ்விங் ஆனது. பூரன் ஒரு ஃபிளிக் ஷாட் ஆட முயற்சித்தார், ஆனா பந்து பேட்டை தொடாம பேட்ஸுக்கு அடிச்சது!

கம்போஜ் உடனே LBW-க்கு அப்பீல் பண்ணார். அந்த அப்பீல் பாருங்க, ஸ்டேடியமே அதிர்ந்திருக்கும்! கம்போஜ் ஒரு நொடி கூட யோசிக்காம, கத்தி கத்தி அம்பயரைப் பார்த்து கையை உயர்த்தி அப்பீல் பண்ணார். ஆனா, அம்பயர் உடனே "நாட் அவுட்" சைகை காட்டினார். அப்போ கம்போஜ் திரும்பி தோனியை பார்த்தார். தோனி முதல்ல கொஞ்சம் யோசிச்சார், ஒரு லேசான புன்னகை முகத்தில். DRS எடுக்குறதுக்கு சம்மதிக்காம, "இது அவுட் இல்லைனு நினைக்கிறேன்" மாதிரி ஒரு லுக் விட்டார். ஆனா கம்போஜ் விடவே இல்லை!

தோனியும் கம்போஜின் அந்த கான்ஃபிடன்ஸை பார்த்து, "சரி, இவன் இவ்ளோ சத்தமா கத்துறானே, எடுத்து பார்க்கலாம்"னு மனசு மாறி DRS எடுத்தார். டைமர்ல 5 செகண்ட் மட்டுமே பாக்கி இருந்தது, அவ்ளோ டைட்டான மொமெண்ட்! எல்லாரும் டிவி ஸ்க்ரீனை பார்த்து பதட்டமா வெயிட் பண்ணாங்க. பால் ட்ராக்கர் வந்தது... முதல்ல பந்து பேட்ஸுக்கு அடிச்சது கன்ஃபார்ம் ஆச்சு. அப்புறம் பால் ட்ராக்கிங்... ஒரு செகண்ட் மூச்சு விட முடியாத பதற்றம்... திடீர்னு மூணு சிவப்பு விளக்கு! "OUT"னு ஸ்க்ரீன்ல வந்தது! CSK வீரர்கள் எல்லாம் கத்தி குதிச்சு கம்போஜை நோக்கி ஓடி வந்தாங்க. தோனி கூட ஒரு சின்ன சிரிப்போடு "என்னடா இது!"னு பார்த்தார். பூரன் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்த DRS முடிவு மேட்சின் ஃப்ளோவையே மாற்றிடுச்சு, LSG-யோட மொமெண்டத்தை உடைச்சு CSK-க்கு ஆரம்பத்திலேயே அட்வான்டேஜ் கொடுத்தது.

இந்த மொமெண்ட் ஏன் ஸ்பெஷல்?

நிக்கோலஸ் பூரன் இந்த சீசன்ல ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் பயங்கர ஃபார்மில் இருக்கார். 215.43 ஸ்ட்ரைக் ரேட்டோடு 349 ரன்கள் அடிச்சிருக்கார். இவரை ஆரம்பத்திலேயே அவுட் ஆக்கினது LSG-யோட பேட்டிங் மொமெண்டத்தை தடுத்து நிறுத்திடுச்சு. கம்போஜோட இந்த நம்பிக்கையும், தோனியோட DRS கால்-ஓட சமயோசிதமும் இந்த மேட்சை CSK பக்கம் திருப்பியது. "தோனி ரிவ்யூ சிஸ்டம்"னு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க!

CSK வெற்றிக்கு மற்ற காரணங்கள்

நூர் அஹ்மத் மேஜிக்: இந்த இளம் ஆஃப்கான் ஸ்பின்னர் 4 ஓவருக்கு 13 ரன்கள் மட்டுமே கொடுத்து LSG பேட்ஸ்மேன்களை மிரட்டினார். 13 டாட் பால்கள் வீசி "க்ரீன் மோஸ்ட் டாட் பால்ஸ்" விருதையும் வென்றார்.

தோனி-துபே கூட்டணி: 56 ரன்கள் தேவைப்பட்ட கடைசி 5 ஓவர்களில் தோனி (26 off 11) மற்றும் துபே (43* off 37) அபாரமாக ஆடி மேட்சை முடிச்சு வைச்சாங்க. தோனி ஒரு சிக்ஸர், நான்கு ஃபோர்ஸ் அடிச்சு ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டார்.

ஜடேஜா-பதிரனா: ஜடேஜா 2 விக்கெட், பதிரனா 2 விக்கெட் எடுத்து LSG-யை 166-க்கு கட்டுப்படுத்தினாங்க.

CSK இந்த வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. இருந்தாலும், இந்த வெற்றி டீமுக்கு நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை தரும் என்பதில் சந்தேகமில்லை. 2019ம் ஆண்டுக்கு பிறகு தோனி "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருதையும் வென்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com