சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் 4 வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று போலீசார் பார்த்துள்ளனர். உடனே போலீசார் அந்த சூட்கேசில் சந்தேகம் படும்படியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதற்காக சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாமல் சுமார் 35 லிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசார் சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஓட்டேரி போலீசார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் பட்டியலை எடுத்து அதில் யாராவது கொல்லப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் விசாரணை அடிப்படையில் பெண் உட்பட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவலில் உயிரிழந்த நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த அமீர் அலி என்பது தெரிய வந்தது. அமீர் அலியை, அவருடைய மனைவி ரஹீமா மற்றும் ஆண் நபர் அஸ்ராம் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அமீர் அலி மற்றும் அவரது மனைவி ரஹீமா இருவரும் சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் வடமாநிலத்தவர்களுக்கு உறவினர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கொலை செய்த மனைவி ரஹீமாவிடம் விசாரணை மேற்கொண்டதில்,கொலை செய்தது ஏன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக கொலை செய்யப்பட்ட அமீர் அலி தனக்கு இரண்டாவது கணவர் என்றும், ஆனால் திருமணத்திற்கு பிறகு பல பெண்களோடு அவர் உறவில் இருப்பதாகவும் ரஹீமா தெரிவித்துள்ளார். மேலும் “தன்னைக் கொடுமை படுத்துவதாகவும், தனது ல் திருமணத்தை பற்றி பேசி அடிதத்தாலும், அதனால் தனக்கு தெரிந்த அஸ்ராம் அலியோடு சேர்ந்து கொலை செய்தாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றி விட்டு வேறு சிலரோடு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த போது கணவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை வெவ்வேறு இடத்தில் வெட்டி வீசியதாகவும் அஸ்ராம் அதற்கு உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக தன்னை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பல பெண்களுடன் உறவில் இருந்த கணவரின் ஆணுறுப்பையும் ஆத்திரத்தில் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அமீர் அலியின் தலையை எங்கு வெட்டி வீசி உள்ளார்கள் என போலீசார் கைதான மனைவி ரஹீமா மற்றும் ஆண் நண்பருடன் விசாரணை நடத்தி தலையை மீட்கும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.