க்ரைம்

புருஷன் இருக்கும் போதே.. கள்ளக்காதலனுடன் வாழ பிளான்? இடையூறான பிஞ்சு குழந்தை… கொலை செய்து கேஷுவலாக இருந்த காதலன்!

நவம்பர் 11ஆம் தேதி ஏதோ ஒரு காரணத்தைக் கூறி சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற

Muthu Lakshmi

ஜார்க்கண்ட் மாநிலத்தில், தாயின் உறவினர் ஒருவர் இரண்டரை வயது பெண் குழந்தையை ஓடையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுக்கார பெண்ணான குழந்தையின்தாயின் கள்ளகாதலில் இருந்த அந்த நபர், குழந்தை தங்களது உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போன குழந்தையைத் தேடி வந்த போலீசார், கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி, தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 11ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்சந்தா கிராமத்தில் வசித்து வரும் சமீர் பான் என்பவரது வீட்டிற்கு சிறுமியும் அவரது தாயும் சென்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது. சமீர் பான் குழந்தையின் அந்த பெண்ணின் அத்தை மகன் ஆவார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நவம்பர் 11ஆம் தேதி சிறுமியை சமீர் பானு வீட்டை விட்டு வெளியே அழைத்த்து சென்றதாகவும், அதன் பிறகு சிறுமி திரும்பி வரவில்லை என்றும் போலீசார் கண்டறிந்தனர். மேலும், சமீர் பான் சிறுமியின் தாயுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இருவரும் வேறு இடத்திற்குச் சென்று ஒன்றாக வாழ திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களுடன் குழந்தை இருப்பது இவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று சமீர் பான் கருதியுள்ளார். இதனால் குழந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 11ஆம் தேதி ஏதோ ஒரு காரணத்தைக் கூறி சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற சமீர் பான், அருகிலிருந்த ஓடைக்குக் கொண்டு சென்று குழந்தையைத் தண்ணீரில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகக் கூறி அவர் போலீசாரைத் திசைதிருப்ப முயன்றுள்ளார்.

இருப்பினும், அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார், கடந்த வெள்ளிக்கிழமை அவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் மனமுடைந்த சமீர் பான், குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக முஃபசில் காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிராமத்திற்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சமீர் பானைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து பிஞ்சுக் குழந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.