க்ரைம்

“புருஷன் கூட இருக்கும் போதே” - மனைவியிடம் ஆபாச சைகை.. யாருன்னு சொல்லவே தலை குனிவா இருக்கு!

அந்த நபரை பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்...

Saleth stephi graph

சென்னை ஓட்டேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிற்கு காவலர் ஒருவர் ஆபாச செய்கை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செங்கை சிவம் மேம்பாலம் நோக்கி ஜமாலியா வழியாக சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள ஒரு உணவகத்தில் உணவை வாங்கிக் கொண்டு இருசக்கரத்தை வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளனர். 

அப்போது மது போதையில் இரு சக்க வாகனத்தை இயக்கி வந்த ஒரு நபர் தொடர்ந்து அதிகப்படியான ஹாரன் அடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த தம்பதியினர் ஹாரன் நடித்த நம்பரை திரும்பி பார்க்கையில் அந்த நபர் இந்த பெண்ணை கண்டு ஆபாச சைகை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்தப் பெண்ணின் கணவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அந்த நபரை தட்டி கேட்டுள்ளார். 

ஆனால் மது போதையில் இருந்த அந்த நபர் மீண்டும் தொடர்ந்து ஹாரன் அடித்து ஆபாச செயலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் அந்த நபரை பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர் P2 காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் அவர் பெயர் தினேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்