வேலூர் மாவட்டம், குடியாத்தம் சேதுக்கரை பகுதியில் கிளை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு பாஸ்போர்ட் சொல்லப்படுகிறது.
அந்த பாஸ்போர்ட் புக் உடன் அஞ்சல் ஊழியர் பொன்னம்பட்டி பகுதியில் உள்ள அஜய் என்பவரின் குடும்பத்தை நேரில் சென்று அணுகி உள்ளார். அப்போது அவரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை ஆய்வு செய்து அவரிடம் படிவத்தில் கையெழுத்து பெறும் போது ஒவ்வொரு படிவத்திலும் வெவ்வேறு விதமாக கையெழுத்து போட்டுள்ளார். அதற்கு அஞ்சல் ஊழியர் “மாறி மாறி கையொப்பம் இருந்த படிவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எனவே நீங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருக்கிறார்.
இதனால் லோகேஷ் மற்றும் அஜய் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஞ்சல் ஊழியரிடம் கேட்ட பொழுது “அஜய் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அஞ்சல் ஊழியரை தாக்கியதாகவும் அவரின் கையைப் பிடித்து அவரது வாயில் மது ஊத்தி தன்னை மரத்தில் கட்டி வைத்தனர்” எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அஜய் இடம் கேட்ட பொழுது “அஞ்சல் ஊழியர் தான் மது போதையில் என்னிடம் தகாத வார்த்தையில் பேசி தனது தாயின் துணியை பிடித்து இழுத்தார்” என தெரிவித்தார். எனவே நடந்தது என்ன? குற்றவாளி யார் என்பதை குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சென்ற அஞ்சல் ஊழியருக்கும் பாஸ்போர்ட் வாங்குபவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.