புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி பகுதியை சேர்ந்தவர் இன்ப அரசன். இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது, சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு காளைகளை அடக்கி பரிசு பெறுவது என் வாழ்ந்து வந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளை வாங்கி விற்பது ஜல்லிக்கட்டில் காளைகளைப் அடக்குவது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது போன்றவற்றில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
எனவே இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்த நிலையில் பார்க்கும்போதெல்லாம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் ஒரு கட்டத்தில் இன்பரசன் உயிரோடு இருந்தால் நமக்கு தொல்லை என்று கருதிய விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து இன்று காலை இன்பரசனை அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே ஓட ஓட விரட்டி இரண்டு கைகளையும் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதில் இன்பரசனுக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வல்லத்திராகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இன்ப அரசனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இன்பரசன் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்ய வேப்பங்குடி சென்ற போது வரும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பள்ளியின் அருகே காலையில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.