

உத்தரபிரதேசம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு ஷங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ரேஷ்மா என்பவருக்கும் திருமணமாகி 7 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ராம்பாபு ஷங்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். பின்னர் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ரேஷ்மாவிற்கு அதே பகுதியை சேர்ந்த கோரிலால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
தந்தை இறந்த பிறகு தாய் வேறு ஒருவருடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளாத குழந்தைகள் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. எனவே ரேஷ்மா குழந்தைகளை விட்டு விட்டு காதலன் கோரிலால் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறார். தாய் காதலன் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரது குழந்தைகள் யாரும் அவரிடம் பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரேஷ்மாவின் முதல் மகனுக்கு கடந்த ஆண்டு (நவ 29) ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு ரேஷ்மாவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
ஆனால் ரேஷ்மா திருமணத்திற்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இதனை பெரிதாக நினைக்காத அவரது மகன் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து தனது திருமணம் சடங்கிற்கு தாயை அழைக்க அவரது வீட்டிற்கு நேரில் சென்றிருகிறார். அப்போது கோரிலாலிடம் ரேஷ்மா குறித்து கேட்ட போது “உனது தாய் இனி எப்போது வரமாட்டாள்” என தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் மகன் தனது தாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோரிலாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவிற்கு கோரிலாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோரிலால் ரேஷ்மாவை அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் மூன்று நாட்கள் அப்படியே வீட்டில் வைத்திருந்த நிலையில் அருகில் உள்ள காலி இடத்தில் ஏழு அடிக்கு குழி தோண்டி புதைத்து விட்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
கோரிலாலை கைது செய்த போலீசார் கடந்த (ஜன 07) ஆம் தேதி இரவு ரேஷ்மாவின் எலும்புகளை தோண்டி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் காதலன் கோரிலாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.