Pudukkottai nursing student death Pudukkottai nursing student death
க்ரைம்

செவிலிய மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழப்பு! மாணவர்கள் தர்ணா போராட்டம் - நேரில் வந்த 'அறநிலையத்துறை அமைச்சர்'

சிகிச்சைக்காக மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார்.

Vinvizhi Leninton

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமி. இவர் அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்வதால் மூச்சுத் திணறல் அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அவர் படித்து வரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைக்காக மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டைமான் விடுதி பகுதியை சேர்ந்த விவசாயி மகள் சீதாலட்சுமி என்ற இளம் மாணவி தனது மூக்கில் ஏற்பட்டுள்ள சிறு கட்டியை அகற்றுவதற்கு, தான் நர்சிங் படிப்பை மேற்கொண்டுவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ததால் மாணவி உயிரிழந்ததாக சகா மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கல்லூரி மாணவிகள் மற்றும் உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்திவந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இரண்டு நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் செவிலியர் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை திங்கள்கிழமை நிறைவேற்றுவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ள நிலையில் போராட்டம் தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு வாபஸ் பெறுவதாக செவிலியர் கல்லூரி போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டி சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தமிழக அரசு சார்பில் உயர்மட்ட குழு விசாரணைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

மேலும், செவிலிய மாணவர்கள் ஆட்சியரிடம், முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். அதில், உயிரிழந்த மாணவிக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த மாணவிக்காக காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாணவியின் இறுதிச்சடங்கில் அனைவரும் பங்கேற்க உரிய பேருந்து மற்றும் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, கோரிக்கையை தமிழக முதல்வருக்கு தெரிவித்து இரண்டு நாட்களில் நிறைவேற்றுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.