புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஸ்வரி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பரமேஸ்வரி தனது குடும்ப வறுமையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டுபட்டி கெயின் ஆப் இண்டஸ்ட்ரியல் என்ற சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகேஸ்வரி தம்பதியின் மகன் அர்தீப்குமார் இதே நிறுவனத்தில் லிப்டிங் ஆபரேட்டராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பரமேஸ்வரிக்கும் அர்தீப்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.
அர்தீப் குமாருக்கு ஏற்கனவே அவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அந்த பெண் அவருடன் வாழாமல் வேறு திருமணம் செய்து கொண்டு உள்ளதை மறைத்து, பரமேஸ்வரிட்டியிடம் தனது குடும்பம் வசதியான குடும்பம் என்றும் தன்னை திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என்று ஆசை வார்த்தை கூறி பரமேஸ்வரியை ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய பரமேஸ்வரி இவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரை எதிர்த்து அர்தீப் குமாருக்கு சம்மதம் தெரிவித்தார்.
அப்போது அர்தீப் குமார் “எங்கள் வீட்டில் பிரச்சனை அதிகமாக இருக்கிறது எனவே நீ கர்ப்பிணி ஆனால் மட்டுமே எங்கள் வீட்டில் ஏதாவது சண்டை போட்டுவிட்டு உன்னை எங்கள் குடும்பத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ஆசை வார்த்தையை கூறி பரமேஸ்வரியை ஏமாற்றி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பரமேஸ்வரி கர்ப்பிணி ஆனார். இது சம்பந்தமாக அர்தீப்குமாரிடம் தான் கர்ப்பிணியாக உள்ளதை தெரிவித்துள்ளார். இருப்பினும் அர்தீப் குமார் அவரை பல காரணங்களை கூறி திருமணம் செய்து கொள்ளாமலும் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லாமலும் அழைக்களித்து வந்துள்ளார்.
இதனால் பரமேஸ்வரி அதே நிறுவனத்தில் அருகே உள்ள சகி ஒருங்கிணைவு மையம் & சமூக நலன் மற்றும் மகளிர் துறை அலுவலகத்திற்கு சென்று அர்தீப் குமார் மீது புகாரளித்துள்ளார். இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக இந்த பெண் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் தந்தை எனவும் இதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் பரமேஸ்வரிக்கு சம்பவ இடத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு தனக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை சரி செய்த பிறகு இரண்டு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் உறுதியளித்து வாக்குமூலம் எழுதிக் கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார் அர்தீப்குமார்.
அதன் பிறகு இரண்டு வருடங்கள் கடந்து அர்தீப் குமார் இதுவரை பரமேஸ்வரியை தொடர்பு கொள்ளாமல் ஏமாற்றி வருகிறார். பரமேஸ்வரி குழந்தையை பெற்றெடுத்த கையேடு காவல் நிலையத்தில் தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகாரளித்துள்ளார். அந்த புகாரை சரிவர விசாரிக்காமல் போலீசார் காலதாமதம் செய்து வருவதாகவும் உடனடியாக விசாரித்து தன்னுடன் காதலனை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் ஏற்கனவே அர்தீப் குமார் மீது போக்சோ வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.