vinothini and silambarasan 
க்ரைம்

“தனக்கு தானே பிரசவம் செய்த நர்சிங் மாணவி” - தொப்புள் கொடியோடு புதைக்கப்பட்ட சிசு.. குழந்தைக்கு கடவுளாக மாறிய மூதாட்டி!

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் வினோதினி கர்ப்பமடைந்துள்ளார். தான் கர்ப்பமானதை வீட்டில் மறைத்து

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள உதய சூரிய புரத்தை சேர்ந்தவர், வினோதினி இவர் மேட்டுச்சாலை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே போல் புதுக்கோட்டை அன்னவாசல் பகுதிக்கு அடுத்துள்ள வயலோகம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரும் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில் வினோதினிக்கும்  சிலம்பரசனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் வினோதினி கர்ப்பமடைந்துள்ளார்.தான் கர்ப்பமானதை வீட்டில் மறைத்து விடுதியிலேயே தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். பிரசவ நேரம் நெருங்கியதால் பயந்த வினோதினி கடந்த ஒரு வாரத்திற்கு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

vinothini house

வினோதினியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.  நேற்று(மே 18) மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால் வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட வினோதினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு குழந்தை பிறந்தது வெளியில் தெரியக்கூடாது என நினைத்த வினோதினி.

வீட்டிற்கு வெளியில் தண்ணீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழியில் தாயின் உதவியுடன் குழந்தையை அவசர அவசரமாக புதைக்க முயற்சித்துள்ளார். குழந்தை அழத் தொடங்கி உள்ளது. எனவே குழந்தையை ஒன்று பாதியாக புதைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர்.

குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், குழந்தையின் குரல் கேட்ட அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், குழந்தையை மீட்டு இது குறித்து போலீசில் தகவலாளித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டதில் வினோதினி குழந்தையை புதைத்து தெரிய வந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர், குழந்தையை கொலை செய்ய முயற்சித்ததாக வினோதினி மீதும், அதற்கு தூண்டுதலாக சிலம்பரசன் மீதும் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்துள்ள நிலையில், வினோதினி சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சை முடிந்தது கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்