க்ரைம்

“ஒரே மரத்தில் சடலமாக தொங்கிய தம்பதி” - ஏழு ஏக்கர் நிலத்தால் வந்த தகராறு… நடந்தது தற்கொலையா? கொலையா?

இதனால் கடும் மன அழுத்ததில் இருந்த தம்பதியினர் இன்று காலை அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மாமரத்தில்...

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கருப்பையா. இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மேலும் இரண்டு மகன்களும் திருமணமாய் ஒருவர் சென்னையிலும் மற்றோரோருவர் ஆலங்குடியில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே தனியாக வசித்து வந்த தம்பதியினர் தங்களது தேவைக்காக அவர்களது பேரில் இருந்த 7 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்திருக்கின்றனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பையை மற்றும் லட்சுமி அந்த ஏழு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த கருப்பையாவின் இளைய மகன் முருகன் அவரது தாய் தந்தையிடம் “யாரை கேட்டு நிலத்தை விற்பனை செய்தீர்கள்” என கேட்டு தகராறில் ஈடுபட்ட தோடு அந்த நிலத்தை விற்ற பணத்தில் தனக்கு உரிய பங்கினை கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தொடர்ந்து தினந்தோறும் குடுத்திட்டு வந்து சொத்து மற்றும் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் தாய் தந்தை என கூட பார்க்கலாம் முருகன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் கடும் மன அழுத்ததில் இருந்த தம்பதியினர் இன்று காலை அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்ரா கோட்டை காவல்துறையினர் விரைந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கருப்பையா லட்சுமி தம்பதியினரின் அவர்களாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? இந்த உயிரிழப்பு எப்படி ஏற்பட்டது என்ற கோணத்தில் தற்பொழுது கருப்பையாவின் மகன் முருகேசன் உட்பட பல யிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.