“தனியாக இருந்த பெண்ணை கை பிடித்து இழுத்து அத்துமீறல்” - வீட்டின் தோட்டத்தில் நடந்த அவலம்… கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி!

கிராமத்தில் நத்தக்குலம் பகுதியில் பதுங்கி இருந்த திருமணமான பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட...
“தனியாக இருந்த பெண்ணை கை பிடித்து இழுத்து அத்துமீறல்” - வீட்டின் தோட்டத்தில் நடந்த அவலம்… கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் பின் பக்கத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடமலை என்ற நபர் திடீரென அந்தப் பெண்ணின் கையையும் நைட்டியையும் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்திருக்கிறார்.

வடமலையை பார்த்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண் அவரை தடுத்து சத்தமிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வடமலை பெண்ணை அடித்து இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதையடுத்து அந்த பெண் தனக்கு நடந்ததை பற்றி அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Admin

இது குறித்து வழக்குப்பதிவு செய்து சங்கராபுரம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தி வடமலையின் போன் நம்பர் வைத்து ச.செல்லம்பட்டு கிராமத்தில் நத்தக்குலம் பகுதியில் பதுங்கி இருந்த திருமணமான பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமலையை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து போலீசார் வடமலை மீது திருமணமான பெண்ணை மானபங்கம் படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளியை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com