க்ரைம்

கத்தி எடுத்துட்டு பின்னாடியே வந்த "படுபாவி" காதலன்.. காதலிச்ச பொண்ண இப்படி பண்ண எப்படி தான் மனசு வந்துச்சோ? வெளியான Exclusive "புகைப்படம்"

இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை பின்தொடர்ந்து முனிராஜ் அவரை சரமாரியாக...

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேரன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மூத்த மகள் ஷாலினி அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய முனிராஜ் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை பின்தொடர்ந்து முனிராஜ் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். 

இதனை தொடர்ந்து மாணவி ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த முனிராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளியை வெளியில் விட சொல்லி வாக்குவாதம் செய்து வருகின்றனர். 

முதலில் முனிராஜ் மாணவியை 10 நாட்கள் பின் தொடர்ந்து காதலை தெரிவித்த நிலையில் அதனை மாணவி மறுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டார், என தகவல் வெளியான நிலையில் தற்போது மாணவியும் வாலிபரை தொடக்கத்தில் காதலித்து பின் முறித்ததால் கொலை செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது. இன்று காலை மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன் வாலிபர் கத்தியோடு அவரை பின் தொடர்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி காதலை மறுத்ததால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாவிதத்திலும் நாம் வளர்ச்சி அடைந்துவிட்டோம், ஆனால் காதல், பிரிவு, நட்பு போன்ற உளவியல் முரண்களை கையாளுவதில் நாம் இன்னமும் பக்குவப்படவில்லை. இன்னமும் ஒரு பெண் காதலை ஏற்க மறுத்தால், “எனக்கு கிடைக்காத நீ வாழவே கூடாது” என்ற மோசமான மனநிலையோடுதான் பல ஆண்கள் இங்கே உள்ளனர். அதற்கு ஒரு உதாரணமாகத்தான் இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் அரங்கேறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.