சிதம்பரம் பகுதியில் உள்ள அண்ணாமலை நகர் வெள்ளக்கரை மேல் தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ்(38). இவர் சிதம்பரத்தில் உள்ள காசி மட தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த கடையில் இவரது உறவினரான புதுச்சேரியை சேர்ந்த வேல்மணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
காளிதாஸின் அண்ணன் மகளுக்கும், வேல்மணிக்கும் இடையில் நாளடைவில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த காளிதாஸ் நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை முறை உறவினர்கள் காதலிப்பது தவறு விட்டுவிடுங்கள் என கண்டித்துள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாமல் வேல்மணியும் காளிதாசன் அண்ணன் மகளும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.
எனவே இதை தடுக்க வேல்மணியை வேலையை விட்டு துக்கியுள்ளார் காளிதாஸ். இதனால் ஆத்திரமடைந்த வேல்மணி காளிதாஸை கொலை செய்யும் எண்ணத்தில் தனது நபரான விக்கியின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு காளிதாஸின் கடைக்கு சென்றுள்ளார்.
காளிதாசன் கடைக்குள் புகுந்து கத்தி மற்றும் அரிவாளை பயன்படுத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் காளிதாசன் உடலை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொலை செய்த வேல்மணியையும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்