Admin
க்ரைம்

“மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர்” - பல நாட்கள் நோட்டமிட்டு காத்திருந்த கொடூரம்.. கட்டி வைத்து விளாசிய கிராம மக்கள்!

இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்துமீறியது...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருமணமாகாமல் பெற்றோர் பாதுகாப்பில் வீட்டில் இருந்துள்ளார். எனவே எப்போது கணவன் மனைவி இருவரில் ஒருவர் மகளுக்கு பாதுகாப்பாக வீட்டில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் பெண்ணின் தந்தை வேலை காரணமாக வெளியூருக்கு சென்ற நிலையில் தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் சில மளிகை பொருட்கள் இல்லை என்பதாலும் அவற்றின் தேவை இருந்தாலும் பெண்ணின் தாய் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றிருக்கிறார்.

இதனால் வீட்டில் இளம் பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த ஏலகிரி கிராமம் மூடன் வட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் 39 வயதுடைய பிரபு இளம்பெண் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணின் கை கால்களை கயிற்றால் கட்டி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வலி தாங்க முடியாமல் இளம் பெண் கத்தியுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்துமீறியது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் பிரபுவை பிடித்து நடுத்தெருவில் வைத்து தர்ம அடி கொடுத்து கட்டிவைத்தனர். மேலும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் பிரபுவை அவர்களிடமிருந்து மீட்டு காவல் நிலயத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இளம் பெண்ணின் தாயார் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஜோலார்பேட்டை பகுதியில் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை சிலர் நோட்டமிட்டு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பிரபு முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நோட்டமிட்டு காத்திருந்து நேற்று முன்தினம் பிரபு பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.