

தமிழகத்தின் அரசியல் களம் தற்போது தலைகீழாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு.
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே பின் விளைவுகளை ஏற்படுத்தி அவர்மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது.
அதற்கு பிறகு விஜய் -ம் அவரது தந்தையும் சினிமா வட்டாரத்தில் எம்மாதிரியான உறவை வைத்திருந்தனர் என பல பல பிரபலங்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர். நடிகர் சரத்குமார், நெப்போலியன், கருணாஸ் என பலரும் விஜய் -உடனான தங்களின் கசப்பான அனுபவங்களை பொதுத்தளத்தில் பகிர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த விஷயங்கள் எல்லாம் விஜய் மீது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தியதோ இல்லையோ அவரின் தந்தையான எஸ்.ஏ.சி -யின் மீதான விமர்சனங்களையும், எதிர் கருத்துக்களையும் பொதுவெளியில் அதிகளவில் கிளப்பியது.
இந்நிலையில் விஜய் -ன் திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்த ஆரம்ப கால படங்களை எல்லாம் அவரின் தந்தை எஸ்.ஏ.சி -தான் இயக்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் வெளியான ‘விஷ்ணு’ படம் பெரும் வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. மேலும் அப்படம் வெளியான சமயத்தில் அடுத்தடுத்து நிறைய வெற்றிகளை சுவைத்தார் விஜய். விஜய் -ன் விஷ்ணு படத்தின் தயாரிப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், விஜய் மற்றும் அவரது குடும்பத்தின் செயல்பாடு குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, “விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பதில் எல்லாம் தவறு இல்லை. ஆனால் அதற்கு தகுதி வாய்ந்தவரா? என்பதை விஜய்யும் அவரின் தந்தையும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விஜய் -க்கு எதுவுமே கஷ்டப்பட்டு கிடைத்தது இல்லை. அவரின் தந்தை தந்திரமாக பெற்றுக்கொடுத்தது. எஸ்.ஏ.சி ஒரு சந்தர்ப்பவாதி, அதற்கு ஒரு உதாரணம் ‘செந்தூரப் பாண்டி” படம் விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்டு தன் மகனை அந்த படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் கடைசிவரை அவர்கள் விஜய் காந்தையும் அவர் குடும்பத்தினரையும் கண்டுகொள்ளவே இல்லை. அன்று மதுரையில் தேர்தல் ஆதாயத்திற்காக ‘அண்ணன் விஜயகாந்த்’ என கூப்பிடுகிறார். இவர்கள் விஜயகாந்த் செய்ததில் துளி அளவு கூட செய்திருக்க மாட்டார்கள். விஜயகாந்த் படப்பிடிப்பில் அவருக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அனைவருக்கும் அதே உணவுதான் வழங்கப்படும். விஜயகாந்த் ‘ரோகிணி லாட்ஜ்’ என்ற ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கே 24 மணிநேரமும் வகை வகையான உணவுகளை மக்களுக்கு அளித்தார். ஆனால் இவர் இன்று விஜயகாந்தை பற்றி பேசி அரசியல் ஆதாயம் தேடி வருவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நாகரிகம் கருதி விஜயகாந்த் குடும்பம் இதை பற்றி பேசாமல் இருக்கிறது அவ்வளவுதான்.” என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராஜாவின் பார்வையிலே படத்தில், அஜித் - விஜய் இணைந்து நடித்திருப்பார்.அந்த படத்தில் அஜித் -விஜய் இருவருக்கும் சமமான அளவு கதாபாத்திரம் உண்டு.. Double Hero சப்ஜெக்ட் என சொல்லி அழைத்து வந்தனர், ஆனால் அஜித் கதாபாத்திரத்தை முழுவதுமாக டம்மியாக்கி, ஒன்றுமில்லாமல் ஆக்கி இருப்பார்கள் .. அதற்கு காரணம் யார் தெரியுமா எஸ்.ஏ.சந்திரசேகர், அதோடு மட்டுமல்லாது, அந்த படப்பிடிப்பு தலத்தில் அஜித் எஸ்.ஏ.சி -ஆல் மிக மோசமாக நடத்தப்பட்டார், அவருக்கான உரிய மரியாதை கொடுக்கப்படாவில்லை. மிகவும் சுயநலமான சந்தர்ப்பவாதி எஸ்.ஏ.சி. அவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. அவர்களின் அடுத்த கட்ட இலக்கு முதல்வர் பதவி அவ்வளவுதான்” என அப்பேட்டியில் பாலாஜி பிரபு பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.