Salem Magudanchavadi Two Deaths 
க்ரைம்

“ஒரே இரவில் சடலமான நண்பர்கள்” - சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்.. இருவருக்குமிடையே நடந்தது என்ன?

கவுசிக்கும் சிவராஜும் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஒன்றாகச் சென்றது தெரியவந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே, நண்பர்களான 15 வயது பள்ளி மாணவர் மற்றும் 24 வயது இளைஞர் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நேற்று(செப் 18) ஆம் தேதி இரவு ஒன்றாகச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறத சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடி ஊராட்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி நாகராஜின் மகன் 15 வயதுடைய கவுசிக். இவர் இளம்பிள்ளை அருகேயுள்ள கே.ஆர்.தோப்பு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை மகுடஞ்சாவடி-இடங்கணசாலை சாலையில், சித்தனூர் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் கவுசிக் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கவுசிக்கின் நண்பரான கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி 24 வயதுடைய சிவராஜ், ஓமலூர் தெசவிளக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

EDAPPADI TWO YOUNGERS DEATH சிவராஜ்

தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், சிவராஜின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கவுசிக்கும் சிவராஜும் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஒன்றாகச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால், சிவராஜ் கவுசிக்கை கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரையும் வேறு யாரேனும் கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem Magudanchavadi Two Deaths

மேலும், அப்பகுதி மக்கள் மற்றும் இருவரின் மற்ற நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே இரவில் நண்பர்களான இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்