former murder case  
க்ரைம்

காதலிக்கு 'செக்ஸ் டார்ச்சர்' - விவசாயியை கூட்டாளிகளுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய இளைஞர் கைது!!

பிரேத பரிசோதனையின்போது செல்லப்பன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து...

மாலை முரசு செய்தி குழு

சேலத்தில் கள்ளக்காதலியை அபகரிக்க முயன்ற விவசாயியை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

இந்தியா முழுக்க பாலியல் ரீதியான குற்றங்களும், திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது. இது உளவியல் மற்றும் சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்லுகிறது. 

அதைபோன்றொரு பிரச்சனைதான் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி மிட்டா காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்லப்பன் என்பவர் கடந்த 7 -ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

இவரின் மர்ம மரணம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் செல்லப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையின்போது செல்லப்பன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.

செல்லப்பன் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இது குறித்து தனது கள்ளக்காதலனான பிரபுவிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அவரிடம் நடத்திய விசாரணையில் பெண்ணின் கள்ளக்காதலன் பிரபு அவருடைய நண்பர்கள் குமரவேல், தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து செல்லப்பனை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி பிரபுக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு தன்னுடனும் தொடர்பில் இருக்குமாறு அப்பெண்ணை செல்லப்பன் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் நண்பர்களின் உதவியோடு அவரைத் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.