சேலம் மாவட்டம், வேடுக்கத்தான்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தோழி செய்த மோகன்ராஜ். மோகன்ராஜின் பக்கத்துக்கு ஊரான திருமலைகிரியில் கடந்த ஐந்தாம் தேதி மாரியம்மன் கோயில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பரான ஜீவானந்தம் தரப்பினருக்கும் மேலும் மற்றொரு தரப்பினரான சில உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் மோகன்ராஜ் தரப்பினர் எதிர் தரப்பினரை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வேடுகத்தான் பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒரு கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இருவரையும் “சண்டை போட்டது அவன் என்ன எதுக்கு வெட்டுன உன்னை கொன்னே போடுவேன்” என கூறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பரை மிட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த இரும்பாலை காவல் நிலைய போலீசார் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர். இருப்பினும் மோகன்ராஜை அடித்துக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தத்தை காட்டுப்பகுதியில் வைத்து பத்துக்கும் மேற்பட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.