“மாப்பிள்ளையை கண்டித்த மாமியார்” - இரு இடையே வீட்டாருக்கு நடந்த தகராறு.. காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டப்பட்ட பெண்!

இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதே போல நேற்று இரவு, இருவருக்கும் இடையே..
“மாப்பிள்ளையை கண்டித்த மாமியார்” - இரு இடையே வீட்டாருக்கு நடந்த தகராறு.. காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டப்பட்ட பெண்!
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் 20 வயதுடைய பிரித்திகா. இவரும், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெயிண்டரான 24 வயதுடைய அன்புராஜ் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதியினர் மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதே போல நேற்று இரவு, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அன்புராஜ், மனைவி பிரித்திகாவை சால்வையால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்த நிலையில், சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மனைவி இறந்ததை உறுதி செய்த பிறகு, அன்புராஜ் நேரடியாக திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த பிரித்திகாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Admin

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சரணடைந்த கணவர் அன்புராஜிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2024 ஜனவரி மாதம் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் பிரிந்துள்ளார்கள். மீண்டும் கடந்த மே மாதம் முதல் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு மாப்பிளை வீட்டாருக்கு பெண் வீட்டாரை பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே கணவன் மனைவி பிரிந்து மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் பிரித்திகாவின் அம்மா கணவன் மனைவி உறவில் குறுக்கிட்டதால் வாலிபர் ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com