க்ரைம்

“மதுவில் கலந்து கொடுக்கப்பட்ட விஷம்” - தந்தையோடு சேர்ந்து குடித்த நண்பர்.. சொத்துக்காக மகன் செய்த செயல்!

இதனை தொடர்ந்து செல்லமுத்துவுக்கும், வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அவரையும்...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய செல்லமுத்து இவர், தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தை, கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையைச் சேர்ந்த, 45 வயதுடைய லட்சுமணன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி செல்லமுத்துவின் மகள் 25 வயதுடைய ஜீவா தனது தந்தை செல்லமுத்துவிடம் குவார்ட்டர் மதுபாட்டில் கொடுத்துள்ளார். வேலையை முடித்துவிட்டு செல்லமுத்தி அதில் பாதியை குடித்த மீதம் லட்சுமணனிடம் கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.

பின்னர் இருவரும் இரவு அவர் அவர் வீட்டிற்கு சென்று இரவு உறங்கியுள்ளனர். மறுநாள் காலை மது அருந்திய லட்சுமணனுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செல்லமுத்துவுக்கும், வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அவரையும் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லட்சுமணன் மற்றும் செல்லமுத்துவிற்கு மகள் ஜீவா கொடுத்த மதுபாட்டிலில் இருந்த, மதுவை அருந்திய பின் வயிற்றெரிச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. எனவே அவரது மகள் ஜீவாவிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவரது அண்ணன் 28 வயதுடைய சிவக்குமார் மதுபாட்டில் கொடுத்ததாக கூறியுள்ளார். அதன்பின், சிவக்குமாரை அழைத்து விசாரித்தபோது நிலப்பிரச்னையில், தனது தந்தை சிவக்குமாரிடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சில ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

எனவே எங்கு சொத்துகளை தனக்கு தர மறுத்து மொத்த சொத்துக்களையும் தனது தங்கை பெயரில் எழுதி வைத்துவிடுவாரோ என நினைத்து சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தந்தையை கொல்வதற்கு திட்டமிட்டு, மதுபாட்டிலில் ஊசி போடும் சிரஞ்சி மூலம் விஷம் கலந்து, தனது தங்கை மூலம் தந்தைக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆத்துார் ஊரக போலீசார், தந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து மகன் சிவக்குமாரை, கைது செய்தனர். சொத்து பிரச்னையில் தந்தைக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்து கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.