“பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்த பெண்” - குஜராத்தில் இருந்து வந்த கள்ளக்காதலன்.. சாலை ஓரத்தில் நடந்த கொலை!

குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்...
Palacode lady murder news
Palacode lady murder news
Published on
Updated on
1 min read

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தர்மபுரி-ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் கொம்மநாயக்கனஅள்ளி அருகே சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரிணையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தது காரிமங்கலம் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் 38 வயதுடைய மனைவி வள்ளி என்பது தெரியவந்துள்ளது. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கணபதி வள்ளி தம்பதிக்கு கிருத்திகா என்ற மகளும் ,ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில் வள்ளி கணவனை பிரிந்த தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வள்ளிக்கு சில ஆண்களுடன் பழக்க ஏற்பட்டு அது நாளடைவில் தகாத உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. மேலும் வள்ளி பாக்கு, ஹான்ஸ், குடிப்பழக்கம் , போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் தெரிவந்துள்ளது. வள்ளியுடன் தகாத உறவில் இருந்த திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த லாரி டிரைவர் புஷ்பராஜ் சம்பவத்தன்று குஜராத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்ல வந்த நிலையில் வள்ளிக்கு பணம் கொடுப்பதாக கூறி ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதிக்கு அழைத்துள்ளார்.

அப்போது புஷ்பராஜுடன் அவரது மச்சினன் 42 வயதுடைய லாரி டிரைவர் மணிவேல் என்பவரும் வந்துள்ளார் இருவரும் சேர்ந்து ஓசூர் அருகே வந்த வள்ளியை லாரியில் ஏற்றிக்கொண்டு மூவரும் பாலக்கோடு சென்றுள்ளனர். இதில் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மற்றும் மணிவேல் ஆகியோர் சேர்ந்து வள்ளியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசுந்தர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து. தனிப்படை போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் புஷ்பராஜ் மற்றும் மணிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com