salem abuse issue  
க்ரைம்

“மனைவியை பார்க்க கூடாத நிலையில் பார்த்த கணவன்” - தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிய பைனான்சியர்.. வீட்டுக்குள் புகுந்து செய்த செயல்!

தனது ஆசைக்கு இணங்குமாறும் அந்த ஆபாச வீடியோவில் இருப்பது போல தன்னுடன்...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வைத்து வைகுந்தம் டோல்கேட் அருகே ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடன் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்தி வந்த நிலையில், முதல் மாதத்திற்கான வட்டியை காளீஸ்வரி ராஜேந்திரனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதத்திற்கான வட்டியை ராஜேந்திரன் கேட்டபோது, ஹோட்டல் தொழில் மந்தமாக இருப்பதால் தற்போது பணம் கொடுக்க முடியவில்லை என காளீஸ்வரி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேந்திரன் காளீஸ்வரியின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, தனது ஆசைக்கு இணங்குமாறும் அந்த ஆபாச வீடியோவில் இருப்பது போல தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், காளீஸ்வரியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அவரது வீட்டிற்குச் சென்ற ராஜேந்திரன், காளீஸ்வரியை கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த காளீஸ்வரியின் கணவர் வீட்டிற்கு வந்த நிலையில், அவரை பார்த்தவுடன் ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் தொடர்ந்து தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அறிந்த அவரது கணவர் இது குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சங்ககிரி போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையின் ராஜேந்திரன் காளீஸ்வரிக்கு போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் கொடுத்த நபர், பணத்தை திருப்பிக் கேட்பது மற்றும் வட்டி பெறுவது என்ற பெயரில் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சங்ககிரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.