கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆணை சந்தோஷ் குமாருக்கு வேண்டும் என்றால் பணம் வழங்க வேண்டும் என்று சந்தோஷ் குமாருக்கு ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவர் கேட்டுள்ளார். ஆனால் பணம் கேட்ட நபருக்கும் சந்தோஷ் குமாருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவரிடம் இது குறித்து பேசாமல் இருந்துள்ளார்.
பிறகு சந்தோஷுக்கு கொடுத்த வீடு கட்டும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக சந்தோஷிடம் கூறியுள்ளனர். ஆனால் தனது பெயரில் வந்த சலுகையை வைத்து வேறொருவர் வீடு கட்டுவதை அறிந்த சந்தோஷ் குமார் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அவர்களிடம் 11.08.2025-அன்று புகார் மனு கொடுத்ததாகவும், புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டு உதவி மையத்திற்கு சந்தோஷ் கால் செய்து “நான் கொடுத்து புகார் மீது ஒரு மாத காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நான் இப்போ என்ன செய்வது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரட்டை கொலை நடைபெற்று உள்ளது. அதே போன்று நான் எனக்கு நீதி கிடைக்கவில்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அவர்களையும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களையும் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களையும் வெட்டி கொலை செய்து விட்டால் என்னதானே பிடித்து சிறையில் அடைப்பீர்கள்” என பேசியுள்ளார்.
மேலும் அரசியல் வாதிகள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் அரசு அதிகாரிகளும் இவ்வாறு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சந்தோஷ் குமார் முதலமைச்சரின் நேரடி உதவி மையத்திற்கு போன் செய்து பேசியா ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஆடியோ கள்ளக்குறிச்சி மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.