திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பத்தில் வசித்து வருபவர் 12 வயது சிறுமி. இவர் பெரியார் நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் படித்து வரும் நிலையில் தினந்தோறும் பள்ளிக்கு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அது போல நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக திருவொற்றியூர் பூ மார்க்கெட்டில் ஷேர் ஆட்டோவில் ஏறி பின்னிருக்கையில் அமர சென்றிருக்கிறார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் மாணவியை முன்னிருக்கையில் அமர வைத்திருக்கிறார்.
மேலும் ஆட்டோவில் பயணிகள் இல்லாத நிலையில் மாணவிடம் பேசிக்கொண்டே சென்ற ஓட்டுநர் ஒரு கட்டத்திற்கு மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தி கூச்சலிடவே ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டு வேகமாக ஆட்டோவை எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர் மாணவியை மீட்ட அப்பகுதியில் இருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த பெற்றோர் சிறுமியை ஆறுதல் படுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அருகில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் ஆட்டோ எண்ணை கண்டிருந்து ஓட்டுநரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்தனர். மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர் மணலி பெரிய மாத்தூர் நேரு நகர் 1வது தெருவை சேர்ந்த 61 சண்முகம் என்பது தெரியவந்தது.
செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போது எண்ணூர் விரைவு சாலையில் உள்ள பாப்புலர் எடை மேடை கடற்கரை பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கடற்கரைப் பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. எனவே திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ரஜனீஷ், உதவி ஆய்வாளர் நவீன் குமார், காவலர்கள் மணிகண்டன் பெருமாள் கண்ணன் ஆகியோர் மறைந்திருந்த சண்முகத்தை பிடித்து ஆய்வாளரின் வாகனத்தில் ஏற்ற முயன்றனர் போலீஸ் வாகனத்தில் ஏறும் போது காவலர்களின் கையைத் தட்டி விட்டு சண்முகம் கடற்கரை பகுதியில் உள்ள கற்கள் மீது தப்பி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சண்முகத்தின் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் செய்தி வெளியான நிலையில் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.