

ஒடிசா மாநிலம், சுந்தர்கட் பகுதியை சேர்ந்தவர் ஷிகா சப்னா. இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு பெற்றோர் கடந்த (ஜன 12) ஆம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு தேவையான சில அழகு சாதன பொருட்களை வாங்க ஷிகா சப்னா இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றிருக்கிறார். மீண்டும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் பயந்த பெற்றோர் மற்றும் உறவினர் ஷிகா சப்னாவை தேடி வந்த நிலையில் சப்னாவின் பெற்றோருக்கு போன் செய்த காவல்துறையினர் உங்கள் மகள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசார் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ஷிகா சப்னா கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து சப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சப்னாவின் பெற்றோர்கள் அள்ளித்தா புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கார்கட் பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் “நான் தான் ஷிகா சப்னாவை கொலை செய்தேன்” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த சப்னா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் ஒரு கல்லூரியில் படித்த நிலையில் முகேஷ் சப்னாவை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்திருக்கிறார்.
ஆனால் சப்னா முகேஷின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முகேஷ் தொடர்ந்து அவரை தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிவு செய்த பிறகு சப்னாவை சந்தித்த முகேஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது சப்னா மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த முகேஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததது தெரியவந்துள்ளது. தொடர்ந்து முகேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். காதலிக்க பெண்ணை நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.